ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப்…

கொடுவாளெடுக்கத் தயக்கமேன்? – வாணிதாசன்

தமிழ்மறை போற்று கின்றீர்: சங்கநூல் விளக்கு கின்றீர்; தமிழ்மொழி எங்கள் ஈசன் தந்ததொன் மொழியென் கின்றீர்; தமிழ்மொழி தொலைக்க வந்த இந்தியை வெட்டிச் சாய்க்கத் தமிழ்ப்புல வீர்காள்! ஏனோ தயங்குகிறீர்! மனமே இல்லை! தமிழரே திராவி டத்தில் தனியர சாண்டி ருக்கத் தமிழர்கள் வடவ ருக்குத் தலைசாய்த்து வாழ்வதற்குத் தமிழரில் ஒருசி லர்கள் சரிசரி போடக் கண்டும் தமிழ்க்கொடு வாளெ டுக்கத் தயக்கமேன்? மனமே இல்லை! வாணிதாசன்

தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை

தமிழன் சீர்மை தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமையமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாளாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான்….

வீரமும் ஈரமும் செறிந்தவனே! பிரபாகரனே! – அரங்க கனகராசன்

ஈழம் எமக்கு நிழலாகும்! இனியவனே ! இன்னுயிரை துச்சமெனக் கொண்டு மண்ணுயிரை – தமிழ் மண்ணுயிரை இனம் காட்டியவனே! தமிழர் என்றோர் இனம் தரணிதனில் அழிந்திடவில்லை என்றே பறை செய்தவனே! வீரத்தின் வேரை பாரின் விளிம்புக்கும் பாய்ச்சியவனே – தமிழர் மாண்பினை போர்முனையிலும் அழகு செய்தவனே! நீ வாழி! நின் எண்ணம் திண்ணமாகும்! ஈழம் எமக்கு நிழலாகும்! அரங்க கனகராசன்