இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள் – தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் பேராசைபகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு. மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவில்லை; அகில மெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீதிலே ஆணை செலுத்த விரும்புவர்; கடலாட்சி பெற்ற பின்னர் வான வெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். “ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை“1 என்றார் ஒரு தமிழ்க் கவிஞர். பாரதப் போரும் தமிழரசும்மண்ணாசை பிடித்த மன்னர் வாழும்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம் – தொடர்ச்சி) தமிழர் வீரம் இசைக்கருவிகள் போர்க்களத்தில் வீர வெறியூட்டும் இசைக்கருவிகள் பல இருந்தன. பறையும் பம்பையும், திட்டையும் தடாரியும், முழவும் முருடும், கரடிகையும் திண்டியும் அத்தகைய கருவிகள்.12 அவற்றின் பெயர்கள் ஒலிக் குறிப்பால் அமைந் தனவாகத் தோன்றுகின்றன. பம்பம் என்று ஒலிப்பது பம்பை; முர்முர் என்று ஒலிப்பது முருடு; கரடிபோல் கத்துவது கரடிகை. இவ்விசைக் கருவிகள் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் பொழுது வீரரது தலை கறங்கி ஆடும்; நரம்புகளில் முறுக்கேறும்; போர்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம்

(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம் – தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழர் படைத்திறம் நாற்படைஅரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத் திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்; புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுமுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான்.1 எல்லாப் படைகளுக்கும் மன்னனே மாபெருந் தலைவன்.யானைப் படைநால்வகைப் படைகளில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது யானைப்படை. செருக்களத்தில் வீறுகொண்டு வெம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப் படையே. அப்படைவீரர் யானையாட்கள்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம்

(தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்-தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்க் கொடியேற்றம் தமிழன் சீர்மைதமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமயமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன்…

தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் திரு. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதிய முதற் பதிப்பின் முகவுரை தமிழர் வீரம் என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன். படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு. இராபி. சேதுப்பிள்ளை அவர்கள். ‘ சொல்லின் செல்வர் ‘ என வள மலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும்…

ஆரியர் நெடும்படை வென்றதிந் நாடு! – வாணிதாசன்

என்னுயிர் நாடு என்தமிழ் நாடு என்றவு டன்தோள் உயர்ந்திடும் பாடு! அன்னையும் அன்னையும் அன்னையும் வாழ்ந்த அழகிய நாடு! அறத்தமிழ் நாடு! தன்னிக ரில்லாக் காவிரி நாடு! தமிழ்மறை கண்ட தனித்தமிழ் நாடு! முன்னவர் ஆய்ந்த கலைசெறி நாடு! மூத்து விளியா மறவரின் நாடு! ஆர்கடல் முத்தும் அகிலும் நெல்லும் அலைகடல் தாண்டி வழங்கிய நாடு! வார்குழல் மாதர் கற்பணி பூண்டு வாழைப் பழமொழி பயி்னறதிந் நாடு! ஓர்குழுவாக வேற்றுமை அற்றிங்(கு) ஒன்றிநம் மக்கள் வாழ்ந்ததிந் நாடு! கார்முகில் தவழும் கவின்மிகு நாடு! கடும்புலிப்…

கொடுவாளெடுக்கத் தயக்கமேன்? – வாணிதாசன்

தமிழ்மறை போற்று கின்றீர்: சங்கநூல் விளக்கு கின்றீர்; தமிழ்மொழி எங்கள் ஈசன் தந்ததொன் மொழியென் கின்றீர்; தமிழ்மொழி தொலைக்க வந்த இந்தியை வெட்டிச் சாய்க்கத் தமிழ்ப்புல வீர்காள்! ஏனோ தயங்குகிறீர்! மனமே இல்லை! தமிழரே திராவி டத்தில் தனியர சாண்டி ருக்கத் தமிழர்கள் வடவ ருக்குத் தலைசாய்த்து வாழ்வதற்குத் தமிழரில் ஒருசி லர்கள் சரிசரி போடக் கண்டும் தமிழ்க்கொடு வாளெ டுக்கத் தயக்கமேன்? மனமே இல்லை! வாணிதாசன்

தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை

தமிழன் சீர்மை தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமையமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாளாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான்….

வீரமும் ஈரமும் செறிந்தவனே! பிரபாகரனே! – அரங்க கனகராசன்

ஈழம் எமக்கு நிழலாகும்! இனியவனே ! இன்னுயிரை துச்சமெனக் கொண்டு மண்ணுயிரை – தமிழ் மண்ணுயிரை இனம் காட்டியவனே! தமிழர் என்றோர் இனம் தரணிதனில் அழிந்திடவில்லை என்றே பறை செய்தவனே! வீரத்தின் வேரை பாரின் விளிம்புக்கும் பாய்ச்சியவனே – தமிழர் மாண்பினை போர்முனையிலும் அழகு செய்தவனே! நீ வாழி! நின் எண்ணம் திண்ணமாகும்! ஈழம் எமக்கு நிழலாகும்! அரங்க கனகராசன்