தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5
(தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தமிழ்நாட்டில் நிருவாகத் தலைவர், அவர்தான் ஆளுநர், ஆளுநர் இரவி! தமிழரல்ல என்பதே முதல் தகுதி! உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக இப்போது ஒரு தமிழர் இருக்கிறார். ஆனால் நிரந்தரமாக ஒரு நீதிபதி வந்தால் தமிழராக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. முகமது இசுமாயில் காலத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எல்லாருமே தமிழர் அல்லாதவர்கள்தான் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும்….
தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4
(தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 நான் சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு ஒரு குடியுரிமை இருந்தால், இந்தியக் குடியுரிமை இல்லை என்றாலும் நாம் தமிழ்நாட்டுக் குடியுரிமை வழங்க முடியும். இப்போது தமிழ்நாட்டில் ஏதிலியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் குடிமக்களா? அவர்கள் ஏதிலிகள் கூட இல்லை. ஏனென்றால் எதிலிகள் தொடர்பான அனைத்துலகச் சட்டத்தில் இந்தியா கையொப்பம் இடவில்லை. ஏதிலிகள் என்பதைக் கூட அங்கீகரிக்கவில்லை. அகதிகள் பற்றிய உலகச் சட்டம் எதுவுமே அவர்களுக்கு பொருந்தாது! (உ)ரோகிங்கியா முசுலிம்களுக்குப்…
தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3
(தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 3 மிகச் சுருக்கமாக நான் ஒன்று சொல்கிறேன். நண்பர்களே, இந்தியாவிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு இருப்பது போல, இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவைப்படுவது போல, தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவை என்கிற சட்டம் வந்தால் இந்தச் சிக்கல் தீரும். நாம் தெருச் சண்டைகள் போட்டு இவர்களை விரட்ட முடியாது. அது சரியான நடைமுறையல்ல. இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? சாதிச் சண்டைகள், சமயச் சண்டைகளை ஊக்கப்படுத்திக் குளிர்…
தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2
(தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’? தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 2 நம்முடைய ஈழத் தமிழர்கள் 10 இலக்கம் பேர் மேலை நாடுகளில் போய் வாழ்கிறார்கள், உழைத்துப் பிழைக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டுச் செல்லவில்லை. இனக் கொலையினால் விரட்டப்பட்டுச் சென்றார்கள்; மீண்டு செல்ல வாய்ப்பு இருந்தால் மீளத்தான் விரும்புவார்கள். யாருக்கும் அகதியாக, வழியற்றவராக, ஏதிலியாக வாழப் பிடிக்காது. இன்றைக்குப் பொருளியல் காரணங்களுக்காக, வறுமையின் காரணமாக அகதிகளாக விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து செல்பவர்களுடைய கூட்டம் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பொருளியல் சூழல், பொருளியல்…