தமிழ்நாடும் மொழியும் 35: 2.1.தமிழின் தொன்மையும் சிறப்பும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 34: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும் தொடர்ச்சி அறிஞர் கால்டுவெலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றிப் பின்வருமாறு எழுதிஉள்ளார். ‘தமிழ் மொழி பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையிலுள்ளது; இதைப் போன்ற திராவிட மொழி வேறு எதுவும் இல்லை‘. தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு அவர் பின்வரும் ஆறு சான்றுகளைக் காட்டுகின்றார். 1.⁠தமிழில் நூல் வழக்கு நடைக்கும் உலக வழக்கு நடைக்கும் வேற்றுமை அதிக அளவிற்கு உள்ளது. நூல் வழக்கு நடையில் வடமொழிக் கலப்பு அருகிக்…

தமிழ்நாடும் மொழியும் 34: 2. தமிழ் மொழி – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – தொடர்ச்சி) 2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும் தோற்றுவாய் பண்டுதொட்டு நந்தமிழ் மக்கள் பேசிவரும் மொழி அமிழ்தினுமினிய தமிழ்மொழியாகும். இன்று இரண்டரைக் கோடி மக்களால் இப் பைந்தமிழ் தாய்மொழியாகப் பேசப்பட்டு வருகிறது. ஆழிசூழ் இப்பூழியில் மக்கள் முதல் முதலாகப் பேசி இருக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளோ, ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்புதான் மக்கள் பேசியிருக்க வேண்டும்; மொழியும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் மொழி கடவுளால் உண்டாக்கப்பட்டதென்று நம் முன்னோர் முதலில் எண்ணினர். “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளிஅதற்கு இணையாகத் தமிழ்…