இணையவழியில் இலக்குவனார் பிறந்த நாள் விழா – தமிழியக்கம்
தமிழியக்கம் வழங்கும் செந்தமிழ்க்காவலர் சி. இலக்குவனார் 113 ஆவது பிறந்த நாள் விழா மெய்நிகர் கூட்டம் கார்த்திகை 01, 2052 / புதன் / 17.11.2021 மாலை 6.00 அடையாளம் 880 3802 5238 கடவுச்சொல் 186801 தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன் சிறப்புரை: பேராசிரியர் முதுமுனைவர் பா.வளனரசு முனைவர் கடவூர் மணிமாறன் நெகிழ்வுரை: பேராசிரியர் முனைவர் இ.மதியழகி
தமிழியக்கத்தின் செந்தமிழ்க்காவலர் சி.இலக்குவனார் 112 ஆவது பிறந்தநாள் விழா
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! – பாவேந்தர் பாரதிதாசன்
இத்தகையோர் இருப்பதைவிட இறப்பது நன்றே! வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ? அரசியல்சீர் வாய்க்கப் பெற்றோர் ஆணிகர்த்த பேடிகளோ? அரும்புலவர் ஊமைகளோ? இல்ல றத்தைப் பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ? பெருவாழ் வுக்கோர் ஏணிபெற்றும் ஏறாத தமிழர்உயிர் வாழ்வதிலும் இறத்தல் நன்றே. 6 மிகுகோவில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர், விழாவெ டுப்போர், தகுமாறு மணம்புரிவோர், கல்விதரும் கணக்காயர், தம்மா ணாக்கர், நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ? நல்வாழ் வுக்கோர் புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர்உயிர் வாழ்வதினும் இறத்தல் நன்றே. 7 மகிழ்ச்சிசெய வருங்கூத்தர், மாத்தமிழை…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙொ] 3. தமிழ்நலப் போராளி புலவர் பட்டம் பெற்ற பின்னர்த் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு (நகராண்மைக் கழக) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகவும் அடுத்துத் திருவையாற்றில் தாம் படித்த அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். படிக்கும் பொழுதே பரப்புரைப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர் இவ்விடங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். கல்லூரிகளில் உள்ளவர்களே தொல்காப்பியரை அறியாக்காலத்தில் தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியருக்கு விழா எடுத்துச் …
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…
இரா.இளவரசு நினைவேந்தல், சென்னை
மாசி 15, 2046 / 27.02.2015