புலிகள் மீதான தடை நீக்கம் – ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு

புலிகள் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு!   இந்தியாவும் புலிகள் மீதானத் தடையை நீக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை! தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட எதிரானவை என, (புரட்டாசி 30, 2045 / 16.10.2014 அன்று) இலக்சம்பர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பரில்…

திலீபன் – உயிர்க்கொடைஞர்களின் குறியீடு.

திலீபனைப் போற்றி விடுதலையை மீட்டெடுப்போம்!   காந்தி வழியில் நடந்ததால், காந்தியம் பேசும் இந்தியத்தால் பறிக்கப்பட்டது திலீபனின் உயிர். இந்தியம் என்பது என்றென்றைக்கும் தமிழ்ப்பகையை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளத் தயங்காது என்பதை உறுதிப்படுத்திக் காட்ட விரும்பியதால் திலீபனின் அறப்போர், உயிர்ப் பறிப்பில் முடிந்தது.   இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன், கார்த்திகை 12, 1994 / 27.11.1963 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஊரெழு என்னும் ஊரில் பிறந்து ஊரெழும் வண்ணம் உலகு தொழும் வண்ணம் வீரனாய் மலர்ந்து வீரனாய்ப் புகழுடல் பெற்றார்.ஆவணி 30, 2018 /…

தமிழீழ விளையாட்டு விழா-2014, முன்சன்

முன்சன்-தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்திய தமிழீழ விளையாட்டு விழா-2014 ஆனி 21, 2045 சூலை 05, 2014 சனிக்கிழமை 11:00 மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கியது. சிறுவர் சிறுமிகளின் ஓட்டப்போட்டிகள், நீளம் பாய்தல், சாக்கோட்டம், பந்தெறிதல் கயிறடித்தல் பெற்றோர்களுக்கு ஓட்டப்போட்டிகள், இசைநாற்காலி(சங்கீதக்கதிரை) இடம்பெற்றன தமிழீழ விளையாட்டான நாயும் முயலும் விளையாட்டை இளையோர்கள் விரும்பி மகிழ்வுறும் முறையில் விளையாடினார்கள். வெற்றி வீரர்களுக்கு தமிழாலய ஆசிரியைகள், சிறப்புப்பணியாளர்கள் பதக்கங்கள்,கிண்ணங்களை வழங்கிப் பாராடடினர். தமிழீழ விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் திடலில் பணியாற்றியவர்களுக்கும், சிற்றுண்டி உணவைச்…

தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில்  தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும்.  இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி…

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 6

 (முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.  . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…