ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் !

பங்குனி 01, 20147 / மார்ச்சு 14, 2016 14:00 – 18:00 மணி போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை! செனீவா தொடக்கமும் இல்லை முள்ளிவாய்க்கால் முடிவும் இல்லை! ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழின அழிப்புக்கு –  படுகொலைக்கு நீதி கேட்டு  செனீவா,  ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் அணி திரள்வோம்! காலத்தின் தேவை கருதி கை கோத்து நீதி கேட்போம்! வாரீர்! வாரீர்! செனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகில் 14/03/2016 நேரம் 14:00 – 18:00 மணி  ஈகைப்போராளி…

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! – ஞா.கிருட்டிணப்பிள்ளை

மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்!   “மட்டக்களப்புக்கு விடிவு காண வாருங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிழக்கு மாகாண அவை உறுப்பினர் ஞா.கிருட்டிணப்பிள்ளை துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவரங்கள், கைப்பற்றப்பட்ட எமது மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றச் சிக்கல் ஆகியவற்றுக்கு நாம் முதன்மையாக முகம் கொடுக்கும் வேளையில், நிலையான அரசியல் தீர்வுக்கான நகர்வையும், எமது அரசியல் பயணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற வகையில் தெரிவிக்காமல் செய்து வருகின்றோம் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.  மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…

நீறு பூத்த நெருப்பு 2/2 – புகழேந்தி தங்கராசு

(நீறு பூத்த நெருப்பு 1/2 தொடர்ச்சி) நீறு பூத்த நெருப்பு 2     எட்டுக் கோடித் தமிழக மக்களின் முதல்வராயிற்றே – என்று கூடப் பாராமல், உடன்பிறந்தாள் செயலலிதா குறித்துப் பொறுக்கித்தனமாக நையாண்டிச் சித்திரம்(கார்ட்டூன்) போட்ட திவயினதான், இப்போது இப்படி எழுதுகிறது. எந்த வழக்கும் இல்லாமல் ௨௦(20) ஆண்டுகளாகச் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாதவர்கள் மீது ‘புலிகள்’ என முத்திரை குத்தப் பார்க்கிறது.  சிறையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று கற்பூரம் கொளுத்தி ஆணையிட்டு விட்டு, அரசியல் கைதிகள் போராடிய பிறகு உண்மையை…

நீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு

நீறு பூத்த நெருப்பு 1   ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.   ‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன்…

எல்லாம் எமதாகும்! – உலோக நாதன்‎

எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம்! பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய்க் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டுச் சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்லத் தமிழ் இனம் இனிச் சாகுமா? வெல்லாப் போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொறுக்குவோம் கொல்லாக் குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ‘செல்‘லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ!…

செயற்கரிய ஆற்றும் பிரபாகரன் – இராசுகுமார் பழனிச்சாமி

நாட்டு நலனுக்காகத் தமிழீழத்தில் அமைந்த துறைகள்! வள்ளுவர் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்ற தமிழனின் பிறந்த நாள் இன்று! செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். உரை : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. எல்லாராலும் இப்படி ஒரு செயலை செய்ய இயலாது. பல கோடித் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தாலும் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே தமிழினத்திற்கு அடையாளம் தந்தவர், தமிழர்களுக்கு என்று ஒரு நாட்டைக் கட்டி அமைத்தவர். அப்படியான ஒரு…

புத்த வெறியல்ல… இரத்த வெறி! -புகழேந்தி தங்கராசு

புத்த வெறியல்ல… இரத்த வெறி!   பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது.    எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப்…

தேசிய நினைவெழுச்சி நாள், அமெரிக்கா

  அன்புக்குரிய எம் அருமைத் தமிழ் மக்களுக்கு, வரும் கார்த்திகை மாதம், 27ஆம் நாள், பிற்பகல் 6:00 மணியளவில்  எமக்காகவும் எம் மண்ணுக்காகவும் தம் உயிரை ஈந்த வீர மறவர்களை நாம் நினைவு கூரவுள்ளோம். தயவு செய்து உங்கள் எல்லோரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன்  வேண்டிக் கொள்கிறோம்.

நாடகமன்றோ நடக்கிறது! ஐ.நா-வில் அமெரிக்கத் தீர்மானங்கள்

ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம்   பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன.   முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக்…

சண்டாளக் காடையர் குடி யழிப்போம்!

சாக்காடு நாள்வரை யாம் மறவோம் ! கூடி எம் நாட்டில் களித் திருந்தோம் குடும்பமாய் நன்றாய் மகிழ்ந் திருந்தோம் முற்றத்தில் ஆடிக் கதைத் திருந்தோம் முழுநிலவு கண்டே வாழ்ந் திருந்தோம் அக்கையும் அன்னையும் சார்ந்திருந்தோம் அழகுத் தமிழை யாம் கற்றிருந்தோம் அம்மம்மா சொல்லும் கதை கேட்டோம் அம்மப்பா ஊட்டும் நெறி கண்டோம் ஒற்றுமை யோடே வாழ்ந் திருந்தோம் ஓர்நிலம் ஈழம் நினைந் திருந்தோம் மாவீர ரீகம் வணங்கி நின்றோம் மாயீழ விடுதலை பெற்றி ருந்தோம் தேசியத்தலைவரை வாழ்த்தி வந்தோம் தேசமே உயிரென்றே களி கூர்ந்தோம்…

ஒரு முறையாவது முத்தமிடவேண்டும்! – புகழேந்தி தங்கராசு

கதை எழுதுவதென்று முடிவெடுத்த கணத்தில் கண் முன்னே விரிந்ததெல்லாம் கண்ணீர்க்கதைகள்… எதை எழுதுவது? ஒருமுறைக்கு இருமுறை எண்ணிய பிறகுதான் எழுதுகிறேன் இதை! இது ஒரு விதையின் முகவரியை விவரிக்கிற முயற்சி… கவிதையென்றோ…. கதையென்றோ…. எப்படியாயினும் இதை அழைக்கலாம் நீங்கள்.. உண்மை – என்றே இதை விளிக்கிறேன் நான்! இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. பதுங்குகுழிக்குள் இருக்க நேரும் அவலம் மட்டும் முடியவில்லை அவர்களுக்கு! முரசுமோட்டையிலிருந்து அம்பலவன்பொக்கணை வரை மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்… பதுங்குகுழிகள் மட்டும் மாறவேயில்லை! இடப்பெயர்ச்சி என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு…