சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்.
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 3/3 மேலும் அவர், மறைமலையடிகள் தமிழ் நான்மறை குறித்து விளக்கியதை, “வேதம் என்னும் சொல்லும் தமிழ்ச்சொல்லே. இதற்கு ‘வே’ என்பது முதனிலை. ‘வேய்தல்’ என்னும் சொல்போல பல சொற்கள் இம்முதனிலையில் பல்கின. ‘வேய்தல்’ என்றால் மூடிமறைத்தல் என்ற கருத்து. இது போன்றே வே+அம் இடையில் த் எழுத்துப்பேறு கொண்டு ‘வேதம்’ என்று ஆகி மறைபொருளைக் கொண்டது’ என்னும் பொருளைத் தந்தது. நன்னெறிகளை அறிவுறுத்தியதால் அஃதொரு அறிவு நூல். இருக்கு வேதத்தில் ஒரிடத்தில்…
தாயே, தமிழே! – தாராபாரதி
தாயே, தமிழே! நினைவாலும் கனவாலும் எனையாளும் தமிழ் மகளே! திணைமாவைவிட இனிக்கும் தேமாவும் புளிமாவும் பனையோலை யில்கண்டு பதநீர் குடித்தவளே! உயிரே! மெய்யே! உயிர்மெய்யாய் இருப்பவளே! தமிழே, உனக்கு உயிர் – மெய்யாய் இருக்கிறதா? குற்றுயிராய்க் கிடப்பவளே ஊசலாடும் குறையுயிரில் வாழ்பவளே சிற்றுயிரைத் தந்துன்னை எழுப்புதற்கு சிலிர்த்திருக்கும் உன் மக்கள் சிறுத்தைக் கூட்டம்! – கவிஞர் தாராபாரதி