தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
பேரன்புடையீர், வணக்கம். தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும் அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும் வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர், ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….