தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 – சி.சேதுராமன்
(தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 தொடர்ச்சி) தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள்…
பொங்கி வரும் மேநாள் – தமிழ் ஒளி
“கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக் கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!” “மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளிகையில் விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க பொங்கிவந்த மே தினமே!”