தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ – உரையரங்கம்
சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக் கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை முதலான பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார். த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார். முனைவர் க.ப. அறவாணன்…