தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும் பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடலை நிகழ்த்தியது. சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். முனைவர் ப.மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார். முனைவர் க.ப.அறவாணன், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன், முனவைர்…
தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலிபெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்
பேரன்புடையீர், வணக்கம். தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும் அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும் வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர், ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான்….