தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை!
(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழில் படித்தவர்க்கே தமிழ்நாட்டில் வேலை! தமிழ்நாட்டில் தமிழைக் கல்விமொழி ஆக்குவதற்காக நீண்ட நெடுங்காலமாய்ப் பற்பல வகையிலும் போராடி வருகிறோம். ஆனால் நம் இலக்கை அடைய முடியவில்லை என்பது மட்டுமன்று. அது நம்மை விட்டு விலகி விலகிப் போய்க் கொண்டுமிருக்கிறது. கல்விமொழி என்றால் முதற்பயில்மொழியும் ஒரே பயிற்றுமொழியும் என்று பொருள். பொதுவாக உலகில் ஒவ்வொரு தேசமும் அதனதன் தேசிய மொழியையே –…