திசைகாட்டும் கல்லை நிறுவிய தமிழர்கள்

  தமிழ் வேந்தர் தம் நாட்டின்கண் வழிப் போவார்க்குரிய இடையூறுகளை விலக்கி, எல்லாரும் போக்குவரவு புரிதற்குரிய பெருவழிகளை அமைத்து அவ்விடங்களில் விலங்குகளாலும் கள்வர் முதலிய தீயவர்களாலும் துன்பம் நேராதபடி படைமறவர்களை நிறுவக் கருதினர். பலவூர்களுக்குச் செல்லும் வழிகள் ஒன்று கூடி மயங்குதற்குரிய கவர்த்த வழி ‘கவலை’ எனப்படும். இவ்வாறு பலவழிகள் கூடிய நெறியிற் செல்வார். தாம் செல்லும் ஊருக்குரிய வழி இன்னதெனத் தெரிந்து கொள்ள இயலாது. மயங்குதலியல்பு வழிப்போவார் இவ்வாறு மயங்கி இடர்பாடுதலாகா தென்றெண்ணிப் பண்டைத்தமிழர் பல வழிகள் சந்திக்கும் இடத்திலே திசைகாட்டும் கல்லை…

64 கலைகள்

இசைக்கலை ஆடற் கலை சிற்பக்கலை சித்திரக்கலை கட்டடக்கலை கவிதைக்கலை நாடகக்கலை இசைக்கருவிகள் இசைக்கும் கலை நீரலை இசைக்கலை (சலதரங்கம்) பன்மொழித்திறமை பல நூல்களைக் கற்றுணர்தல் கவி நயம் விளக்கல் கவிநடையில் பேசுதல் கவிதை வினா விடை கவிதையை முழுமையாக்கல் ஒப்புவித்தல் அழகுறப் பேசுதல் பல்சொற்பொருள் திறன் திறனாய்வுக் கலை குண இயல்புகளை அறிதல் ஒப்பனைக் கலை வண்ணப்பூச்சுக்கலை திலகமிடும் கலை கூந்தல் முடிக்கும் கலை ஆடை அணியும் கலை நகை அணியும் கலை தோட்டம் அமைத்தல் மலரால் அழகுபடுத்தல் கோலமிடுதல் உருவங்களைத் தோற்றுவித்தல் பொம்மைகள்…

ஓவியத்திலும் பழந்தமிழர் சிறப்புற்றிருந்தனர்!

  “ஒவ்வு’ என்றால் ஒன்றைப் பற்று அல்லது ஒன்றைப் போல இருப்பது என்பது பொருள். இதிலிருந்து “ஒப்பு, ஓவம், ஓவியம்’ எனச் சொற்கள் பிறந்து உள்ளன. கண்ணால் கண்ட பொருளை மனதில் நிறுத்திப் பின்னர் இத்ன உருவத்தைச் சுவரிலோ அல்லது பிற பொருள்களின் மீதோ தீட்டி மூலப்பொருட்களின் தன்மையை அதில் எதிரொளிக்கச் செய்வதே ஓவியமாகும்.   பழந்தமிழகத்தில் வண்ணம் தீட்டும் கோல்கள் “தூரிகை, துகிலிகை’ என இருவகைகளில் இருந்தன. வண்ணம் குழைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டும் பலகை வட்டிகை, மணிப்பலகை எனப்பட்டன. தூரிகை பாதிரிப்பூவைப் போல் இருந்தன…

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்

தமிழர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் என்பது உண்மை அறியா மாந்தரின் கற்பனையுரையேயாகும். திராவிட நாகரிகமும் பண்பாடும் இந்நாட்டு மண்ணிலேயே முளைத்து எழுந்து, தழைத்து, வளர்ந்து பல விழுதுகள் விட்டு முதிர்ந்த பேராலமரமாகும். – இந்தியக் கலை-பண்பாடுகள் – தமிழ்ச்சிமிழ்

வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே!

வேற்றுலகம் இருப்பின் அவ்வுலக மொழியும் தமிழே  தமிழ் மொழி இயற்கையான மொழி என்பதால் நம் பூவுலகு போல வெளியுலகு இருப்பின் அங்கும் தமிழ் மொழியே இருக்க முடியும் என்று நாம் அழுத்தமாகக் கூறலாம். அறிவியல் இந்தக் கூற்றை வலியுறுத்தும் நாள் விரைவில் வரும். – இரா.வேங்கட கிருட்டிணன்: தமிழே முதன் மொழி: பக்.389 – தமிழ்ச்சிமிழ்  

தொல்காப்பியம் – இயல் பகுப்பும் நூற்பா அளவும்

இயல் பகுப்பும் நூற்பா அளவும்      தொல்காப்பியர் நமக்கு அருளிய தொல்காப்பியம் எனும் நூலில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 9 இயல்கள் உள்ளன. இயல்களின் பெயர்களையும் நூற்பா எண்ணிக்கையையும் அறிவதற்குத்துணை செய்யும பாக்கள் வருமாறு:   எழுத்ததிகார இயல்கள்   நூலின் மரபு, மொழி மரபு, நுண் பிறப்பு, மேலைப்புணர்ச்சி, தொகை மரபு, பால் ஆம் உருபு இயலின் பின், உயிர், புள்ளி, மயக்கம், தெரிவுஅரிய குற்றுகரம் செப்பு.   1. நூல் மரபு, 2….