மலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்
மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத் தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில் தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு…