தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4.
(தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்3 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4/4 மரணத் தண்டனைக் கைதியாக இருந்த போதும் சரி, அத்தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகும் சரி, புலவரைத் தொடர்ந்து தனிக் கொட்டடியிலேயே அடைத்து வைத்தனர். 12 ஆண்டுக்கு மேல் பல்வேறு சிறைகளில் போராட்டமும் அடக்குமுறையுமாகக் கழிந்தபின் பத்திரிகையாளர் கன்சியாம் பருதேசு எடுத்துக் கொண்ட முயற்சியால் புலவர் பிணையில் விடுதலை ஆனார். சற்று முன்பின்னாக அவ்வழக்கில் மற்றவர்களும் விடுதலையானார்கள். சிறையில் புலவரை நான் கடைசியாகப் பார்த்தது 1974 கடைசியில்தான். 1977இல் தொடங்கி…
தோழர் தியாகு எழுதுகிறார் 40: சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4
(தோழர் தியாகு எழுதுகிறார் 39 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 4 கீழ்ச்சாதிக்காரன் தரத்தைக் கெடுத்து விடுவான் என்று சொல்லாமல் சொல்லும் இந்த மேல்சாதிக் கூட்டத்துக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும்: இடஒதுக்கீடு என்பது ஒரு கல்விக் கழகத்தில் நுழைவதற்குக் கோரப்படுகிறதே தவிர இறுதியில் பட்டம் பெற்று வெளியே வருவதற்கு அல்ல. அதாவது இடஒதுக்கீடு சேர்க்கையில்தானே தவிர தேர்ச்சியில் அல்ல. தேர்ச்சிக்கான படித்தரங்கள் எல்லார்க்கும் ஒன்றுதான். ‘இந்து‘ வின் சாதியம் பிராமணியத்தின் தகுதி-திறமைவாதமும் சாதிக் குருட்டுச் சாதியமும் எவ்வளவு விபரீதமான வாதங்களுக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதற்கு ஆங்கில நாளேடு ‘இந்து’ வின் ஏப்பிரல் 2 ஆசிரியவுரையே…
தோழர் தியாகு எழுதுகிறார் 39 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 3
(தோழர் தியாகு எழுதுகிறார் 38 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? – 3 இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் (IIT), இந்திய மேலாண்மைப் பயிலகம் (IIM), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பயிலகம் (AIIMS) என்ற வகையிலான கல்வி நிறுவனங்களில் ஒன்றே ஒன்றிலாவது ஏனைய பிற்படுத்தப்பட்டோர் அவர்களின் மக்கள் தொகைக்குரிய விழுக்காட்டை நெருங்கியிருப்பதாகக் காட்ட முடியுமா? இந்த உயர்கல்விப் பயிலகங்களில் ஒன்றே ஒன்றின் நிருவாகத்திடமிருந்தாவது அதன் ஆசிரியர்கள் -மாணவர்களின் வகுப்புவாரிக் கணக்கைக் கேட்டுப் பெற முயன்றார்களா உச்ச நீதிமன்ற நீதிபதிகள்? வழக்கில் வந்து சேர்ந்து கொண்ட பேராசிரியர் பி.வி இந்திரேசன் போன்றவர்களிடம் ‘ஐ.ஐ.டி.யில் பிராமணர்கள் எத்தனை?…
தோழர் தியாகு எழுதுகிறார் 38 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? . 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 37 தொடர்ச்சி) சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா? 2 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இந்திய அரசு நடத்தும் மையக் கல்விப் பயிலகங்களில் ஏனைய பிற்படுத்தப்பட்டோர்க்கு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதற்கெதிராகத் தொடரப்பட்ட நீதிப் பேராணை (ரிட்) வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் உசாவலுக்கும் தீர்ப்புக்கும் காத்துள்ளது. இந்நிலையில் மேற்படிச் சட்டத்தின் 6ஆம் பிரிவை நிறுத்தி வைக்கும்படி அரிஜித் பசயத், லோகேசுவர் சிங் பந்தா ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட ஆயம் (‘பெஞ்சு’) சென்ற மார்ச்சு 29ஆம் நாள் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்துப் பல செய்நுட்பக் கேள்விகள்…