தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள்
(தோழர் தியாகு எழுதுகிறார் : கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (3)(ஆ) தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள் நேர்காணல்: மினர்வா & நந்தன் மா.பொ.க.வில்(சி.பி.எம்மில்) இருந்து வெளியேறியதும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினீர்கள் அல்லவா? இந்தியா இலங்கைக்குப் படை அனுப்புகிறது. ஈழத்தில் தமிழ் மக்கள் இந்தியப் படையால் கொல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுதான் திலீபன் மன்றத்துக்கான அடிப்படை. விடுதலைக் குயில்கள் அமைப்பு நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் இணைந்து 1993இல் தமிழ்த்…
பார்வைத்திறன் பறிபோன பின்னும் படைப்புப் பணியைக் கைவிடாத அறிஞர்..! – இலக்குவனார் திருவள்ளுவன்
காலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்! “தமிழர்களின் தேசியமொழி தமிழ்தான். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளித்தல் வேண்டும்.” தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்திற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. அதே நேரம், தமிழ்த்தேசியம் பேசுவதாக எண்ணும் சிலர், தமிழை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தைப்பற்றி இழிவாகச்சொல்வது நம்மை நாமே தாழ்த்துவதாகும். திராவிடம் என்பது தமிழின் பெயரன்று. ஆனால் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுவதற்கு அடையாளமாக வந்த பெயர். ஆரியம் வந்த பொழுது அதற்கு எதிராகத் தனிமையில் தமிழ் மட்டுமல்லாமல், அதன் மொழிக்குடும்பமே இணைந்திருக்க…
பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் : வி. சபேசன்
பொங்கல் விழாக்கள் – சில நெருடல்கள் இம் முறை புலம்பெயர் நாடுகளில் பொங்கல் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இந்தக் கொண்டாட்டங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழர்களிடம் எஞ்சியுள்ள தமிழர் திருநாளான பொங்கலுக்கு விழா எடுத்துக் கொண்டாடியவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். ஆயினும் சில செய்திகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். அடுத்த ஆண்டு பொங்கலை இன்னும் சிறப்பாக, ஒரு தமிழர் திருநாள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. பொங்கல் விழா என்பது தமிழர்…
தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!
குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா? இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும். கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான்…
மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன் : பகுதி 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி) தமிழ்த்தேசியம் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர் முக்குலத்தவர் ஆட்சி செய்த நாடுதான் தமிழ்நாடு. எனினும் இனம் என வரும் பொழுது சேர இனம், சோழ இனம், பாண்டிய இனம் என இல்லாமல் தமிழினமாகத் தழைத்திருந்தனர். எனவேதான், தமிழ்த்தேசியத்தை உணர்த்தத் தமிழகம் எனச் சேர்த்தே புலவர்கள் பாடி உள்ளனர். இதை உணர்த்தும் வகையில், அரசால் மூவர் என்றாலும் இனத்தால் ஒருவரே என உணர்த்தும் வகையில், ” நாம்மூவர் ஆனாலும் ஒரும னத்தார்! நாட்டினில்வே…
தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி
தமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி இலக்குவனார் சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப் பணி ஆற்றுவதோடு நின்றுவிட வில்லை பேராசிரியர். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே ‘என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’ இதழ் வாயிலாக வும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த்தேசியம் என்பதை வலியுறுத்தினார். இந்திய விடுதலைக்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே “உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா! உன்றன் நாடும் உரிமைபெற்றிட உழைத்திடு தமிழா! என்று தமிழக விடுதலை…