சமூகநீதித் தமிழ்த் தேசம்! – கால் நூற்றாண்டு நிறைவு விழா
புரட்டாசி 20, 2049, சனிக்கிழமை, 06.10.2018, மாலை 5.00 காரணீசுவரர் கோவில் தேரடித் தெரு, சைதாப்பேட்டை சமூகநீதித் தமிழ்த் தேசம்! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வெள்ளி விழா திலீபன் நினைவேந்தல் கூவம் அடையாறு ஆற்றோர மண்ணின் மக்களை வெளியேற்றாதே! கண்ணகி நகர் – பெரும்பாக்கத்தில் அடைத்துள்ள மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து! மனிதர் மலத்தை மனிதர் அள்ளும் இழிவை ஒழி! துப்புரவுப் பணிக்கு எந்திரப் பொறிகளைப் பயன்படுத்து! பொது (‘நீட்டு’ ) த் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் விலக்குக் கொடு! இந்திய உயர்கல்வி…
பன்னாட்டு நீதிப் பொறிமுறை வேண்டும் கூட்டறிக்கை
ஈகச் சுடர் திலீபன் நினைவு நாளில் (2015 செப்டம்பர் 26) ஒரு கூட்டறிக்கை இருபத்தெட்டு ஆண்டுகள் முன்பு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தாலும் இந்தியப் படையிறக்கத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டம் சந்தித்த நெருக்கடியை வெற்றி கொள்ளச் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போர் புரிந்து இன்னுயிர் தந்த திலீபன் நினைவாக – திலீபனின் 28 ஆவது நினைவு நாளான சென்ற 26.09.2015 அன்று மாலை 6 மணியளவில் சென்னை தியாகராய நகரிலுள்ள செ. தெ. தெய்வநாயகம் பள்ளியில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் நடத்திய “வேண்டும்…
வேண்டும் பன்னாட்டு நீதிப் பொறிமுறை – த.தே.வி.இ.கருத்தரங்கம்
திலீபன் 28ஆவது நினைவுநாள் கருத்தரங்கம் இருபத்தெட்டு ஆண்டு காலம் முன்பு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் இந்தியத் தலையீட்டால் நெருக்கடிக்கு உள்ளான போது சொட்டு நீரும் அருந்தாத பட்டினிப் போராட்டத்தில் உயிர் தந்து தடை நீக்கிய ஈகச்சுடர் திலீபன் நினைவு நாளில் …. இன்று சிங்கள-அமெரிக்க-இந்தியக் கூட்டுச் சதியால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்தில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன? என்ற வினாவிற்கு விடைதேடும் கருத்தரங்கினை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் நடத்துகின்றோம். திலீபன் நினைவை நெஞ்சில் சுமந்து……
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுக் குழு முடிவுகள்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு சென்ற மார்கழி 13, 2045 / 28.12.2014 ஞாயிறு அன்று சென்னையில் கூடி எடுத்த ஒருமன முடிவுகள்: 1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். 2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 3) தோழர் தியாகு, தோழர் வே.பாரதி, தோழர் பாரி ஆகியோரைக் கொண்டதே இயக்கத்தின் புதிய தலைமைக் குழு. 4) தமிழ்த்…