ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து!
ஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து! வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 அன்று தட்சிணாமூர்த்தியாகப் பிறந்து கருணாநிதியாக மலர்ந்து கலைஞராக உயர்ந்துள்ள முதுபெரும் தலைவருக்கு அதே வைகாசி 21 / சூன் 03 இல் 93 ஆம் பிறந்தநாள் பெருமங்கலம் வந்துள்ளது. தம் உரைகளாலும் எழுத்துகளாலும் படைப்புகளாலும் கோடிக்கணக்கான மக்களிடையே தமிழ் உணர்வை விதைத்து உரமூட்டியவர் என்ற நன்றிக்கடனால் மக்கள் இன்றும் அவருக்கு ஆதரவு தருகின்றனர். ஆளும் கட்சியாளராக ஆகவில்லை என்ற வருத்தமும் வலிமையான எதிர்க்கட்சியாளரான…
பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்? – இலக்குவனார் திருவள்ளுவன்
பாடம் புகட்டிய மக்கள்! – பாடம் கற்றதா நடிகர் சங்கம்? தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மட்டைப் பந்தாட்டம் இன்று(சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016) நடந்து முடிந்துள்ளது. விளையாட்டைப் பரப்புவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டத்தக்கன. 1 வாரம் முன்னதாகவே கலைநிகழ்ச்சிகள் மூலம் விளம்பரப்படுத்தியதும் விழா நாளன்று கலைநிகழ்ச்சிகள் நடத்தியதும், பிற மாநிலக் கலைஞர்களைத் திருமணத்திற்கு அழைப்பதுபோல் சந்தித்துத் துணிமணிகள், வெற்றிலை, பாக்கு மதிப்புடன் அழைத்ததும் என நன்றாகவே திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் அடிப்படையே ஆட்டம் கண்டதால் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை….
வாழ்த்திற்குரிய கலைஞரே! இனி என்ன செய்யப் போகிறீர்கள்?
கலைஞர், வரலாற்றில் அருவினை பல ஆற்றிய அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை! நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்; மடல்களாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த படைப்பாளர்; ஏறத்தாழ 75 திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில் நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான் வாய்ப்பு பெற்றனர் என்பது அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை…