தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! –புதுச்சேரி அரசிற்கு வேண்டுகோள்
கிடப்பில் போடப்பட்டுள்ள தமிழ்நலப்பணிகளைச் செயற்படுத்துக ! தனித்தமிழ்இயக்கம், புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை அமைச்சர்க்கு வேண்டுகோள்! தமிழ்ப் பணி,கலை,இலக்கியப் பண்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கடந்த பல்லாண்டுகளாகப் புதுச்சேரிஅரசு கலை,பண்பாட்டுத்துறை மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டு விட்டது. அவை வருமாறு: தொல்காப்பியர்விருது10ஆண்டுகளுக்குமேல் வழங்கப்படவில்லை. 2. சிறந்த நுால்களுக்கான கம்பன் புகழ்ப்பரிசு, நேருகுழந்தைகள் விருது, போன்றவைபலஆண்டுகளாக வழங்கப்படவில்லை. புதுச்சேரி எழுத்தாளரகளின் நுால்கள் நுாலகங்களுக்கு வாங்கப்படவில்லை. கடந்த 25ஆண்டுகளாக ஒரு புதிய கிளைநுாலகம்கூடத் திறக்கப்பட வில்லை. 5. இருக்கும் நுாலகங்களுக்கு நுாலகர்கள் அமர்த்தப்படவில்லை. உரோமன் உரோலந்து…