ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத்தமிழர் வாழ்வு குறித்து இரட்டை நிலைப்பாடு வேண்டா! ஒருவர் தன் கொள்கையை அல்லது கருத்தை மாற்றிக் கொண்ட பின்னர் முன்னர் அவர் சொன்னதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கக்கூடாது. சான்றாகத் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இறை மறுப்பாளர் என்ற முறையில்தான் உலகறியப்பட்டவர். ஆனால், தொடக்கத்தில் அவர் சாமியாராகத் திரிந்ததை வைத்துக்கொண்டு அவரை இறைஏற்பாளர் என்ற அளவில் மதிப்பிடலாமா? கூடாதல்லவா? அதுபோல்தான் மேனாள் முதல்வர் செயலலிதா தமிழ்ஈழம் குறித்தும் விடுதலைப்புலிகள் குறித்தும் தமிழ்க்கேடர்களின் கருத்தாக்கத்தால் முதலில் தவறான நிலைப்பாடு எடுத்திருந்தார். சட்ட மன்றத்திலும் மேதகு பிரபாகரனைக்…
ஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு!
ஈழத்தீர்மான விளக்கப் பரப்புரை மேற்கொள்க! வரலாற்றில் இடம் பெறக்கூடிய, தமிழகச் சட்டமன்றத்தின் குறிப்பிடத்தக்க நாளாக ஆவணி 30, 2046 / செப்.16, 2015 அமைந்துள்ளது. அன்றுதான் முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதா, ஈழத்தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நம்பிக்கையும் ஆறுதலும் தரும் வகையில் தனியாள் தீர்மானம் ஒன்றைக் கொணர்ந்து நிறைவேற்றினார். தமிழ் ஈழ மக்கள் எண்ணற்ற சாலியன்வாலாபாக்(கு) படுகொலைக்கும் மேலான இனப்படுகொலைச் சதியால் மாண்டு போயினர். ஆனால், இதனை இனப்படுகொலை என்று சொல்லக்கூட உலக நாடுகள் அஞ்சுகின்றன. நடுநிலை என்று சொல்லிக் கொள்வோரும் போர்க்குற்றம் என்று…