கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

2   கணிணியியலில் ஆங்கில ஒலிபெயர்ப்பிலேயே கலைச் சொற்களும் தலைப்பெழுத்துச் சொற்களும் எண்ணிலடங்கா அளவு கையாளப்பட்டுத் தமிழ் மொழி சிதைந்து வருவதைப் பலரும் உணரவில்லை. ‘மணிப்பிரவாளம்’ என்ற பெயரில் மொழிக்கொலை புரிந்து பாழ்பட்ட நிலையிலிருந்து அண்மைக் காலத்தில் மீண்டுவரும் வேளையில் ஆங்கிலக்கலப்பு விளைவிக்கும் தீங்கைப் பெரும்பான்மையர் புரிந்து கொள்ளவில்லை. பிற அறிவியல் துறைகளில் நிகழும் சொல்லாக்கத் தவறுகள்தாம் கணிணியியலிலும் நடைபெறுகின்றன. ஆனால், பிற துறைகளுடன் ஒப்பிட முடியாத அளவு கணிணியியலில்தான் ஆங்கில ஒலிபெயர்ப்புச்சொற்கள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. இவை முற்றிலும் உடனடியாகக் களையப்பட வேண்டும். சுருக்கக்…

கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடு   எத்துறையாயினும் அத்துறையறிவு தாய்மொழியில் வெளிப்படுத்தப் பட்டால்தான் அம்மொழியினருக்கு முழுப் பயன்பாடு கிட்டும்; அத்துறையும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். அந்த வகையில் கணிணியியலில் முழுமையும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டால்தான் கணிணியியல் முழு வளர்ச்சியடைந்ததாகும்.. இப்பொழுது அந்நிலை இன்மையால், அதனை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். கட்டுரையாளர்களும் நூலாளர்களும் இதழாளர்களும் தமிழில் கணிணியியலை விளக்குவதில் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். ஆனால், அவ்வாறு விளக்குவதில் உள்ள ஆர்வம் தமிழைப் பயன்படுத்துவதில் இல்லை. கணிணிக் கலைச்சொற்களாக நல்ல தமிழ்ச் சொற்கள் இருப்பினும் அதைப் பயன்படுத்தாதவர்களும் உளர்; தமிழ்க்…