தொல்காப்பியம் வரலாற்றுக் கருவூலமாகும் – சி.இலக்குவனார்
எகிப்தியரும், கிரேக்கரும், சீனரும், தொன்மை வாய்ந்த நாகரிகமும் பண்பாடும் உடையவர் என்று வரலாறுகள் கூறுகின்றன. தமிழரும் மிகமிகத் தொன்மை வாய்ந்த நாகரிகமும், பண்பாடும் உடையவர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாகும். ஆனால் இத் தொல்காப்பியத்தை உலகம் இன்னும் நன்கு அறிந்திலது. தமிழர்களே அறிந்திலர். தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கிய விளக்கம் தரும் இன்ப நூலாக மட்டுமின்றி வரலாற்றுக் கருவூலமாகவும் அமைந்துள்ளது. செம்மொழிச் செம்மல் முனைவர் சி. இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 126
” வாழ்வு இன்பத்திற்குரியது” என்று தமிழ்ப் பெரியார்கள் நிலைநாட்டினர்.- சி. இலக்குவனார்
வாழ்வின் குறிக்கோள் என்ன? இன்பமாக வாழ்தல். வாழ்வே இன்பத்திற்குரியது. வாழ்வில் ஒரொருகால் துன்ப நிகழ்ச்சிகள் தோன்றினும் அவையும் இன்பத்திற்கு அடிப்படையாகும்; ஆதலின் இன்பமென்றே கருதத் தக்கன. எல்லாம் இன்பமயம். இன்ப வாழ்வுக்கே இன்ப வாழ்வால் மக்கள் தோன்றியுள்ளனர். உலகில் தோன்றிய பிற நாட்டுப் பொரியார்கள், ” உலகம் துன்ப மயம் ; துன்ப வழ்விலிருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் குறிக்கோள்” என்றனர். தமிழ்ப் பெரியார்கள் அவ்வாறு கருதாது, “வாழ்வு இன்பத்திற்குரியது; இன்பமாகவாழ்தலே வாழ்வின் குறிக்கோள்” என்று நிலைநாட்டினர். அவ்வின்ப வாழ்வுக்கு அடிப்படை இல்லற…