தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙொ] 3. தமிழ்நலப் போராளி புலவர் பட்டம் பெற்ற பின்னர்த் திருவாரூர், குடவாசல், நன்னிலம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு (நகராண்மைக் கழக) உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகவும் அடுத்துத் திருவையாற்றில் தாம் படித்த அரசர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். படிக்கும் பொழுதே பரப்புரைப் பணியில் ஈடுபட்ட பேராசிரியர் இவ்விடங்களிலும் அப்பணியைத் தொடர்ந்தார். கல்லூரிகளில் உள்ளவர்களே தொல்காப்பியரை அறியாக்காலத்தில் தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொல்காப்பியருக்கு விழா எடுத்துச் …
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙை] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை -தொடர்ச்சி இவ்வரிகள் இலக்குவனாரின் தொலைநோக்கைக் காட்டுவதாக இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சி.இலக்குவனார் குறித்து எழுதியுள்ள நூலில்(பக்கம் 50) பேராசிரியர் முனைவர் இ.மறைமலை பின்வருமாறு கூறுகிறார்: “வறியோர்க்கு உணவு, முதியோர்க்கு உணவு, கோயிலில் உணவு என்று பல்வேறு இலவச உணவுத் திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இவை யனைத்தும் பெரும் நிதியையும் கரைக்கும் செலவினங்களாகவே அமைந்துள்ளன. ஆனால், இலக்குவனார் கனவு காணும்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙே] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி படிப்பு, பரப்புரை ஆகியவற்றுடன் படைப்புப் பணியிலும் பேராசிரியர் இலக்குவனார் ஈடுபட்டார். பண்டைநலம், புதுப்புலமை, பழம்பெருமை அனைத்தையும் நல்கிய படைப்புப் போராளியாகவும் பேராசிரியர் தம்மை வெளிப்படுத்தி உள்ளார். கல்விக்கூட அளவில் கவிதைகளும் இதழ்கள் வழிக் கட்டுரைகளும் படைத்த பேராசிரியர் வித்துவான் தொடக்கநிலை மாணவராக இருந்த பொழுதே சிறந்த நூலாசிரியராகவும் மொழிபெயர்ப்பு வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்; ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙூ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙெ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி கல்லூரியின் முதல்வராக இருந்த வேதாந்த(ம் ஐயங்கா)ர் ஓய்விற்குப் பின்பு பி.சா.சுப்பிரமணிய(சாசுதிரி) முதல்வராக வந்தார்; ஆராய்ச்சி ஆர்வம் மிக்கவராக இருந்தாலும் சமசுகிருதப் பற்றால் தவறான கருத்துகளையும் வெளிப்படுத்துவார். ‘இலக்குவன்’ என்னும் பேராசிரியரின் தமிழ்ப் பெயரையே விரும்பாத முதல்வர் இவரைச் சமசுகிருத வெறுப்பாளராக எண்ணினார். தமிழின் தொன்மை, தூய்மை முதலானபற்றிய தவறான கருத்துகளை அவர் தெரிவிக்கும் பொழுதெல்லாம் சான்றுகளுடன் பேராசிரியர் மறுக்கத்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள (இன்று ஒரத்தநாடு என்றும் சொல்லப்படுகின்ற) உரத்தநாட்டிலும் அரசர்மடம் (இராசாமடம்) என்னும் ஊரிலும் உண்டுறைப் பள்ளிகள் உள்ளன. அரசர் மடத்தில் பேராசிரியரின் மாமா வீரபத்திரர் அவர்களின் இரு மக்கள் பயின்று வந்தனர். அங்குச் சென்று கல்வி கற்கும் தணியா ஆர்வத்தில் பேராசிரியர் இருந்தார். பேராசிரியரின் தொடக்கப்பள்ளி ஆசிரியரான தமையன் முறையினரான சதாசிவம்(பிள்ளை) அவர்கள் விண்ணப்பம் அனுப்ப…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடக்கம் பேராசிரியர் தந்தை மு.சிங்காரவேலர் பத்து மா நிலங்களும் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் மளிகைக்கடையும் உடைய செல்வத்தில் திளைத்தவரே. தாய் அ.இரத்தினம்மாள் நாட்டாண்மைப் பெருமை பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே. இரு வாசல் இருப்பின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அத்தகைய இரு வாசல் உடைய மிகச் சில வீடுகளில் இவர்களின் வீடும் ஒன்று. என்ன இருந்து…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும் உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – நூற்றொடர் அறிவிப்பு
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – நூற்றொடர் அறிவிப்பு கோவை ஞானி அவர்களின் தமிழ்நேயம் 49 ஆவது வெளியீடாக மாசி, தி.பி. 2043/ பிப்.கி.பி. 2012 வெளியீடாக வந்த நூல் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அடுத்த வாரம் முதல் வெளிவரும் இவ்விதழின் முன்அட்டை, உள் குறிப்பு (திருமணப்பரிசு என்ற முறையில் நன்றி அறிவிப்பு), பின் அட்டை (நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய இந்நூல் பற்றிய கோவை ஞானி அவர்கள் குறிப்பு) ஆகியன விவரங்களுக்காகத் தரப்படுகின்றன. வருமிதழ் முதல் படைப்பு தொடரும்.