வெருளி நோய்கள் 1461 -1465: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1456 -1460: தாெடர்ச்சி)
வெருளி நோய்கள் 1461 -1465
- நிகழமைவுக் காட்சி வெருளி – Magnufraterphobia
மெய்ம்மைக்காட்சி எனப்படும் நிகழ்வதை உள்ளவாறு காட்டும் நிகழமைவுக் காட்சி(reality television show) குறித்த அளவுகடந்த பேரச்சம் நிகழமைவுக் காட்சி வெருளி.
உள்ளதை உள்ளவாறு காட்டுவதுதான் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நோக்கம். எனினும் பலவும் முன்னதான ஆயத்த ஒத்திகைக்குப் பின்னர் அங்கேறும் நாடகமாகத்தான் உள்ளன. எனவே, மெய்ம்மைக்காட்சி என்று அழைக்க விரும்பவில்லை.
இலத்தீனில் Magnus = பெரிய என்றும் frater = உடன்பிறந்தான் என்றும் பொருள். எனவே, magnufraterphobia என்பதன் நேர் பொருள் பெரியண்ணன் குறித்த வெருளி என்பதுதான்
00
- நிகற்ப எண் வெருளி – Decemteraphobia
நிகற்ப எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் நிகற்ப எண் வெருளி.
நிகற்பம் என்பது 1,00,00,00,00,00,000 ஐக் குறிக்கும்.
00 - நிகற்ப நிகற்ப எண் வெருளி – Exaphobia
நிகற்ப நிகற்ப எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நிகற்ப நிகற்ப எண் வெருளி.
நிகற்ப நிகற்பம் என்பது 10,00,00,00,00,00,00,00,000 ஐக் குறிக்கும்.
‘நிகற்பம் = அர்த்தம்’ என இப்பொழுது குறிக்கப் பெறுகிறது. கோடி கோடி என அடுக்கில் கூறுவதுபோல் நிகற்ப நிகற்பம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. நள்ளெண் என்றுகூடச் சொல்லலாம் என எண்ணுகிறேன்.
00 - நிசான் வண்டி வெருளி – Nissanphobia
நிசான் வண்டிகள் மீதான அளவுகடந்த பேரச்சம் நிசான் வெருளி.
பன்னாட்டு உந்து நிறுவனமான நிசான் பொறியுந்து நிறுவனம்(Nissan Motor Co., Ltd.) சுருக்கமாக நிசான் என அழைக்கப்பெறுகிறது.
00
- நிஞ்சா வெருளி > கரவு ஆமை வெருளி – Ninjaturtlephobia
புனைவுருவான நிஞ்சாக் கடலாமை/ கரவு ஆமை (Ninja Turtles) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நிஞ்சா வெருளி.
கரவாமை என்று சொன்னால் மறைக்காமை என வேறு பொருளாகும். எனவே, ஒளித்தலையும் மறைத்தலையும் குறிப்பதால் கரவு ஆமை என்பதே சரி.
நின் என்னும் சப்பானியச் சொல் மறைந்திருந்து தாக்கும் தற்காப்புக்கலையைக் குறிக்கிறது. சா என்னும் சப்பானியச் சொல் ஆள் என்பதைக் குறிக்கிறது. நின்+சா=நிஞ்சா. கரத்தல் என்பது மறைத்தலைக் குறிக்கும். எனவே கரவு நிலை ஆமையைக் குறிப்பதற்குக் கரவு ஆமை எனலாம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5

Leave a Reply