புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது

புதுச்சேரி அரசில் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க இயலாது என்றுகல்வியமைச்சர் தியாகராசன் 19.9.2014இல் புருசோத்தமன் ச.ம.உ கேள்விக்குவிடையளிக்கும் போது சட்டமன்றத்தில் சொன்னார். அதைத் திரும்பப்பெற வேண்டும்என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கும் கோரிக்கை 32ஆண்டுக்கோரிக்கைஎன்றும் என்.ஆர். பேராயம் (என்.ஆர்.காங்)சட்டமன்றத்தேர்தலில் அளித்தஉறுதிமொழிகளில் ஒன்று தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கப்படும் என்பதாகும் என்பதையும் கல்வியமைச்சரிடம் தமிழமல்லன் எடுத்துக் காட்டி வலியுறுத்திச் சொன்னார். தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கும் உறுதிமொழியை முதல்அமைச்சர் அரங்கசாமி சட்டமன்றத்தில் 2007இல் அளித்துள்ளார் என்றும் எனவே மறுப்பை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் 7.10.2014 அன்று கல்வி யமைச்சர் தியாகராசனிடம் நேரில் வேண்டுகோள் அளிக்கப்பட்டது….

தமிழ்வளர்ச்சிக்கெனத் தனித்துறை அமைக்கப் புதுச்சேரி முதல்வருக்கு வேண்டுகோள்!

  புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி எளிமையானவர் என்ற பெயர் பெற்றுள்ளார். எனினும் தமிழ்நலப்பணிகளில் கருத்து செலுத்துவதில்லை என்றும் தமிழ்நலனுக்குக்கேடு தரும் வகையில் நடந்து கொள்கிறார் என்றும் தமிழன்பர்கள் கூறுகின்றனர். அவர், எக்கட்சியில் இருந்தால் என்ன தமிழ்ப்பகையான பேராயக்கட்சி(காங்.)-இல் ஊறியவர்தானே என்றும் விளக்குகின்றனர். தம்மீதுள்ள அவப்பெயரை நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐப்பசி 11, 2032 (27 அக்டோபர் 2001) – வைகாசி 3, 2037(17 மே 2006) காலத்தில் முதல் முறையும், வைகாசி 4, 2037 (18 மே 2006)– ஆவணி 20…

புதுச்சேரி அரசிடம் தமிழ்வளர்ச்சித்துறை அமைக்க வேண்டுகோள்!

 புதுச்சேரி அரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் ஒன்றைத் தனித்தமிழ் இயக்கம் முதலமைச்சர் அரங்கசாமி அவர்களிடம் நேரில் அளித்தது. தனித்தமிழ்இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தமிழறிஞர்களுடன் சென்று அளித்தார். தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் 32ஆண்டுகளுக்கும் மேல் வலியுறுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் தமிழ் மொழி மேம்பாட்டுக்காகவும் இலக்கிய மொழிபெயர்ப்புப் பணிகளுக்காகவும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அவ்வேண்டுகோளில் பல கட்சிகளைச்சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும்…

தனித்தமிழ் இயக்கம் – சிலப்பதிகார விழா

  தனித்தமிழ் இயக்கம் ஆனி 16, 2045 – 30.6.2014 அன்று மாலை சிலப்பதிகார விழா ஒன்றை அதன் தலைவர் தனித்தமிழறிஞர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடத்தியது. தமிழ்த்தென்றல் வரவேற்புரை வழங்கினார். திருவாட்டி த.தமிழ்இசைவாணி செயல்அறிக்கை படித்தார்.   தூ.சடகோபன், நா.அப்பாத்துரை, முதலியோர் முன்னிலையில் அவ்விழா புதுவை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்றது.   திருவள்ளுவர் படத்தையும் மறைமலையடிகள் படத்தையும் கடலூர் மாவட்ட நூலகஅலுவலர் திருவாட்டி பெ.விசயலட்சுமி அவர்கள் திறந்துவைத்துப் பேசினார்.   சட்டமன்ற உறுப்பினர் ஆ.அசோக்ஆனந்து, வாழ்த்துரை வழங்கினார்.   ‘கற்பைப் போற்றிய…