ஒளவையார்:1: ந. சஞ்சீவி
சங்கக்காலச் சான்றோர்கள் – 10 2. ஒளவையார் ‘-ஒண்டமிழே!பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1] எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது! ———–[1]. தமிழ்விடுதூது———- உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய…
தமிழின்பம் தனி இன்பம் 2/3 – கவியரசர் முடியரசன்
(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி) தமிழின்பம் தனி இன்பம் 2/3 நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி. குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச்…
இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் –17 : இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) சிற்றிலக்கியங்கள் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலம் பக்கம், பாடல், சொல் தேடலாம். மூலமும் உரையும் இணைந்த பகுதியில் பக்கஎண் தேடுதல் இல்லை. சிவப்பிரகாச சுவாமிகள் பனுவல் திரட்டு : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும், ‘மூலமும் உரையும் இணைந்த பகுதியிலும்’ பக்கம் மட்டும் தேடலாம். திருவருட்பா : அட்டவணைப் பகுதியில் உள்ள தேடுதல் தலைப்பு மூலமும் பாடல் தேடலும் மூலமும்…
உயிர்க்கு உயிராய் நிற்கும் தமிழ்
பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண் டெஞ்சியழுக் கேறா வியற்கலையே விஞ்சுநிறம் தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகம் தீயாது சொல்விளையுஞ் செய்யுளே வீயா தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய் வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – தமிழ்விடு தூது: 17-19