தமிழை விலக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு    தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு தலைமைச் செயலகத்தில் இயங்குவதையும் இப்பொழுது இணைய வழியாகக் குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதையும் அனைவரும்அறிவார்கள்.  தனிப்பிரிவிற்கு மடல் அனுப்பினால், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. மக்கள் அனுப்பும் முறையீடுகளைப் பெரும்பாலும் வேறு துறைக்கு மாற்றுதல் அல்லது முறையான மறுமொழி அளிக்காமை முதலானவையே பெரும்பாலும் துறைகளின் பணிகளாக நிகழ்கின்றன. முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மடல்கள்மீது துறைகளின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஒரு சான்று.   பொதுநூலகத்துறையில் நூல் வாங்குவதற்கு…