அறப்போராளி டேவிட் ஐயாவிற்கான அஞ்சலி
அறப்போராளி தாவீது (டேவிட்) ஐயாவுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி ஈழ விடுதலைப் போராட்டத்தைக் குறை கூறும் எல்லோரும் கேட்கும் முதன்மையான கேள்விகளுள் ஒன்று, “அவர்கள் என்ன காந்தி போல அறவழியிலா போராடினார்கள்? ஆயுதம் ஏந்தியவர்கள்தானே!” என்பது. காலமெல்லாம் எழுப்பப்பட்டு வந்த, வருகிற இந்தக் கேள்விக்கான வாழும் விடையாக நடமாடிக் கொண்டிருந்த காந்தியம் தாவீது(டேவிட்) ஐயா கடந்த ஐப்பசி 24 [௧௧-௧௦-௨௦௧௫ (11.10.2015)] அன்று நம் தமிழுலகை விட்டு மறைந்தார். ஈழத் தமிழ் மக்களால் ‘டேவிட் ஐயா’ என…
ஈழத்தீர்மானம் : முதல்வருக்கும் சட்டமன்றத்தினருக்கும் பாராட்டு!
ஈழத்தீர்மான விளக்கப் பரப்புரை மேற்கொள்க! வரலாற்றில் இடம் பெறக்கூடிய, தமிழகச் சட்டமன்றத்தின் குறிப்பிடத்தக்க நாளாக ஆவணி 30, 2046 / செப்.16, 2015 அமைந்துள்ளது. அன்றுதான் முதல்வர் புரட்சித்தலைவி செ.செயலலிதா, ஈழத்தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் நம்பிக்கையும் ஆறுதலும் தரும் வகையில் தனியாள் தீர்மானம் ஒன்றைக் கொணர்ந்து நிறைவேற்றினார். தமிழ் ஈழ மக்கள் எண்ணற்ற சாலியன்வாலாபாக்(கு) படுகொலைக்கும் மேலான இனப்படுகொலைச் சதியால் மாண்டு போயினர். ஆனால், இதனை இனப்படுகொலை என்று சொல்லக்கூட உலக நாடுகள் அஞ்சுகின்றன. நடுநிலை என்று சொல்லிக் கொள்வோரும் போர்க்குற்றம் என்று…
பன்னாட்டு உசாவலுக்கான நீதிப் பேரணி, தொரண்டோ
தமிழர் தேசத்தை அங்கீகரி! இனப்படுகொலையாளிகளைத் தண்டி! அனைத்துநாட்டு விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி தமிழீழத் தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களைச் சேர்ந்த தமிழ்மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா முதலான அனைத்து நாடுகள், தமிழ் மக்கள் மீதுதிணிக்கத் திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையைக் கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இடம்: 360, பல்கலைக்கழ நிழற்சாலை, அமெரிக்கத் தூதரகம் முன்பு (360 University Avenue…
இரண்டகர்களை அடையாளம் காட்டுங்கள்! – வெளிப்படையான மடல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தமிழ் இனத்தின் சார்பில் திறந்த மடலாக வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்: தோல்வி என்பது வெற்றிக்கான முதற்படியே. அதுவே முடிவல்ல. தமிழீழ மக்கள் சந்திக்காதவையல்ல, நீங்கள் சந்தித்திருப்பது. ஆகவே தொடர்ந்தும் தமிழீழ மக்களுடன் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் உறுதியாக செயல்படுங்கள். இவ்வளவுகாலமும் சம்பந்தனும், சுமத்திரனும் மாவை சேனாதிராசா உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் செய்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இனி வரும்காலங்களிலும் தமிழ்த் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு கூட்டமைப்பு தமிழீழ மக்களிற்கு வஞ்சகங்கள் செய்யும்போது கூட்டமைப்பின் உண்மை முகத்தை…
ஈழமும் தமிழகமும் கருத்தரங்கம் – மே 17 இயக்கம்
ஆவணி 05, 2046 / ஆகத்து 22, 2015 மாலை 5.00 சென்னை ஈழம் குறித்த கருத்தரங்கம் வரும் சனிக்கிழமை மாலையில் சென்னையில் நிகழ்கிறது. கடந்த சில வருடங்களில் நமக்கு எதிராக இந்தியாவும், பன்னாடுகளும் முன்னெடுத்த நகர்வுகள் குறித்தும், தமிழர்களின் எதிர் செயல்பாடுகளும் அதற்கான தேவை குறித்தும் ஆய்வரங்கம். ஈழவிடுதலைப் போராட்டத்தைக் குறித்த நமது செயல்பாடுகளைப் பின்னுக்குத்ளதள்ளும் இந்தியாவின் தொடர் செயல்பாடுகளை வீழ்த்துவோம். ஈழம் குறித்த விவாதத்தையும், அடுத்த மாதம் ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் அளிக்கப்படும் அறிக்கை குறித்தும் விவாதிப்போம். வாய்ப்பிருக்கும்…
மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்நேயம் மறந்தாலும் மனித நேயர் அப்துல்கலாம் புகழ் வாழ்கவே! தன் எளிமையாலும் இளைஞர்களிடம் நம்பிக்கை விதைக்கும் உரைகளாலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும், சொல்லப்போனால் உலகளாவிய புகழ் பெற்றவர் மேதகு அப்துல்கலாம். அவரின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்துள்ளது. முகநூல் பக்கங்களிலும் பதிபேசிப் பக்கங்களிலும்(வாட்சுஅப்) இப்பொழுது மிக மிகுதியாகப் பகிரப்படுவன அவரைப்பற்றிய நினைவுகளும் புகழுரைகளுமே! சாதி, சமய, இன, மொழி வேறுபாடின்றி அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு உழைப்பால் உயர்ந்தவராகத் திகழ்கிறார் தமிழ் வழிபடித்துத் தரணி ஆள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளார்….
எமது படையணி விரைகிறது… எம் தேசத்தை மீட்க! – மேதகு வே.பிரபாகரன்
ஈழம் மீட்க அணிவகுத்துள்ளோம்! நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமதுஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது!…
வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல!
வீர வணக்க நாள் வெற்றுச் சடங்கல்ல! இந்தியை எதிர்த்துத் தமிழைக் காக்கத் தம் இன்னுயிர் நீத்த மொழிப் போராளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலத் திங்கள் சனவரி 25 ஆம் நாள் வீர வணக்க நாள் கொண்டாடுகிறோம். இவ்வாரத்திலேயே தமிழ் ஈழத்திற்காக நல்லுயிர் நீத்த ஈகையர் முத்துக்குமாரன் வீர வணக்க நாளும் வருகின்றது. எனவே, இவ் வீர வணக்க நாள் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப்போராளிகளுக்கு மட்டும் என்றில்லாமல் தமிழ் காக்க முதல் உயிர்ப்பலியான நடராசன் முதல் அனைவருக்குமான வீர வணக்க நாளாகவும்…
‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்து!
தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து! திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து! இனப்படுகொலையாளன் பக்சே வீழ்ந்தான் என்ற மகிழ்ச்சியில் கொண்டாடுவோம் இப்பொங்கலை! வரும் புத்தாண்டில் தமிழ் ஈழத் தனி நாட்டிலும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் புத்தாண்டை என்னும் நம்பிக்கையில் கொண்டாடுவோம் இப் பொங்கலை! அகரமுதல இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் எல்லாரும் எண்ணியவாறு நல்லன எல்லாம் எய்தி இன்புற்றிருக்க வாழ்த்துகள்! பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரந்து வாழிய! வையகம் வாழ்க! வான் தமிழ் வெல்க! (-தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்…
இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது!
இலங்கைத் தேர்தல் – வரக்கூடாதவர்கள் வரக்கூடாது! வரும் மார்கழி 24 ,2045 / சனவரி 8, 2015 அன்று இலங்கையில் அரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இலங்கையில் தலைவர் பதவிக்காலம் 6 ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நிகழ வேண்டும். ஆனால், இரண்டாம் முறையாக 2010 இல் தலைரவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொடுங்கோலன் இராசபக்சே எதிர்ப்புகள் வலுத்து வருவதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறான். பொதுவாகத் தேர்தல் என்றால் தகுதியுடையவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டாமல் போகிறது. போட்டியிடுபவர்களில் குறைந்த…
வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்!
வருகின்ற ஆண்டுகள் இன்பம் தருகின்ற ஆண்டுகளாகட்டும்! வரும் தை முதல் நாள் திருவள்ளுவர் 2046 ஆம் ஆண்டுப்பிறப்பு வருகிறது. அதற்கு முன்னால் மார்கழி 17 அன்று 2015ஆம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வோர் ஆண்டையும் நாம் நம்பிக்கையோடுதான் எதிர்பார்க்கி்றோம்! ஆனால், எண்ணிய யாவும் எய்துவதில்லை. இருப்பினும் வரும் ஆண்டு தமிழர் உரிமை எய்தும் ஆண்டாக அமையும் என எதிர்பார்ப்போம்! வெறும் எதிர்பார்ப்பு பயனைத் தராது அல்லவா? எனவே, தமிழர்களின் தேசிய மொழி தமிழே என்பதையும் தமிழர்களின் இனமும் தமிழே என்பதையும் தமிழுக்குத் தலைமையும்…
மாவீரர் நாள் 2045 / 2014