வணங்குதற்குரிய வாரம்!
வணங்குதற்குரிய வாரம்! ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை இரண்டாம் வாரம் / நவம்பர் நான்காம் வாரம் உலகத் தமிழ் மக்களுக்குப் போற்றுதலுக்கும்வணங்குதற்குரியதான சிறப்பான வாரமாகும். நவம்பர் 26, தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் பெருமங்கலமாகும். வாராது வந்த மாமணியாய் நமக்கு அமைந்த ஒப்பற்ற தலைவர் அவர். ‘கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமை‘(திருக்குறள் 1021)யுடன் வாழும் செம்மல் அவர். சலம்பற்றிச் சால்பில செய்யா மா சற்ற (திருக்குறள் 956) மாமனிதர் அவர். ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே…
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – வைகோ அறிக்கை
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று வைகோ அறிக்கை தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து இலக்சம்பெர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு 2011 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் புலிகளின் சார்பில், நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர் விக்டர்கோப்பு வாதாடினார். இலக்சம்பெர்க்கு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை 2014 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. விடுதலைப்புலிகள்…
எம்.பி.நிர்மல் அவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் பாராட்டு!
செவ்வை நேர்த்தி அமைப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மைக்குத் தொண்டாற்றி உலகப்புகழ் பெற்றுள்ள எக்சுநோரா நிர்மல் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2014 தமிழ் விழாவில் பாராட்டினர். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்கான கருத்தாக்கத்தைப் பல தரப்பாரிடமும் ஏற்படுத்தி வரும் அவரது தொண்டினை விழாவில் பாராட்டினர். பேரவையின் முன்னாள் தலைவரும் 2008 பேரவைத் தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரருமான முனைவர் தனிக்குமார் சேரன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் விசயகுமார் முத்துசாமி.பொன்னாடை அணிவத்து வாழத்தினார். சமயங்களுக்கு…
இசைப்பிரியாவிற்கு நீதி வேண்டி ஒன்றுகூடுவோம்!
மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.
மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும் தமிழக முதல்வர் (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர் முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை…
இதயத்தில் எரியும்தழல் என்றைக்கும் அணைவதில்லை!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கண்ணுற்றோர் எல்லாம் கதறி அழுவாரே.. குப்பைத்தொட்டிகளில் வாரியிறைத்தாற்போல் பிணங்களைக் குவித்துக் காட்டினாரே! ஒரு நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்றுசொல்லி, சொந்தநாட்டு மக்களையே நயன்மையின்றிக் கொன்று குவித்தனரே! மனசாட்சி ஒருசிறிதும் இல்லாத கயவர்கள் இன்றும் மனித உருவில் வாழ்கிறார்கள் என்று மெய்ப்பித்தார்களே! பாலுக்கு அழுகின்ற பச்சிளம்குழந்தை முதல் பாவையர் யாவரையும் கொடுமையின் உச்சம் கொண்டு சென்றனரே! இலட்சத்து எழுபதாயிரம் என்கிற உயிர்கள் அவர்களுக்குக் கிள்ளுக்கீரையானதே! எந்த உயிரையும் அவர்கள் கணக்கில் கொள்ளவில்லையே.. முதிய பெரியவர்களும் ஊனமுற்றவர்களும்கூட இவர்கள் பார்வைக்குத் தப்பவில்லையே! வழிபடும்தளங்கள்கூட இவர்களின்…
‘மே’ பதினேழு – இருள் கவிந்தநாள்… : – அறிவரசன்
‘மே’ பதினேழு வன்னி நிலத்தின் முள்ளி வாய்க்காலில் இன எழுச்சிக்குப் பின்னடைவு ஏற்பட்ட நாள்… தமிழ் இன வரலாற்றில் இருள் கவிந்தநாள்… தமிழ்ப் பொதுமக்களும் போராளிகளும் புத்தன்பேர் சொல்பவர்களால் புதை குழிகளில் தள்ளப்பட்டநாள்… விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறங்கொன்றவர்களால் அறிவிக்கப்பட்ட நாள்… ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டதாகச் சிங்களக் காடையர் நம்பத் தொடங்கிய நாள்… வன்னித் தமிழர்களுக்குப் பின்னடைவு நேர்ந்ததால் உண்மைத் தமிழர்கள் பித்துப் பிடித்து நின்றநாள்… கொழும்பும் தில்லியும் நினைத்ததை முடித்ததாகக் கை குலுக்கிக் கொண்டநாள்… நமக்கு எதிரானவர்கள் சிங்களர் மட்டுமல்லர்;…
கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்!
கலைஞர் அவர்களே! நாடகத்தை நிறுத்துங்கள்! நல்ல முடிவெடுங்கள்! என அன்புடன் வேண்டுகின்றோம்! உங்கள் கடந்த கால அருவினைகளையும் படைப்புத்திறனையும் குறைத்து மதிப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவற்றால் ஈர்க்கப்பட்டதால் உங்களைப்பற்றிய மதிப்பான படிமம் உள்ளத்தில் ஏற்பட்டதால்தான் இப்பொழுது இவ்வாறு கூற நேர்கிறது! உங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளீர்கள்! ஒருவேளை அவர்களுக்கிடையே உள்ள மோதலால் ஒருவருக்கு ஒருவர் தீங்கு நேரிடும் என அஞ்சி நீங்கள் கேட்டுள்ளீர்களோ என்றும் தொண்டர்களை எண்ண வைத்தது இது. தமிழக அரிசடம் கேட்காமல மத்திய…
மண்டேலாவைப் போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!
இதழுரை முதுமையில் இறந்திருந்தாலும் நலங் குன்றி யிருந்து இறப்பை எதிர்நோக்கியவர் என அறிந்திருந்தும் ஆன்றோர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவு உலகெங்கும் துயர அலையை எழுப்பி யுள்ளது. எதனால் அவர் நலங்குன்றிப் போனார்? இன மக்களுக்காக ஏற்ற சிறைவாழ்க்கைதானே காரணம்? சிறையில் சுண்ணாம்புக்கல் உடைக்கும் வேலை பார்த்ததால் அல்லவா நுரையீரல் தொற்று நோய்க்கு ஆளானார், அல்லறுற்றார், நலமிழந்தார்! இல்லையேல் நலத்துடன் மேலும் வாழ்ந்திருப்பார் அல்லவா? எனவே, நோய்வாய்ப்பட்டு மறைந்தாலும் மக்கள் பணியினால் பிணிக்காளாகி மறைந்த மாமனிதர், மண்டேலா அவர்கள் எனலாம்….