சேக்கிழாரின் தமிழ் நெஞ்சம் – கடவூர் மணிமாறன்
சேக்கிழாரின் தமிழ் நெஞ்சம் சேக்கிழார் தமிழ்நெஞ்சம் உடையவர். தமிழ் இன்பத்தில் துய்த்துக் களித்து அதனைத் தம் காப்பியத்தில் பதிந்துள்ளார். பாண்டிய நாட்டில் வீசும் தென்றல் தென்தமிழை நினைவூட்டுவதாக மூர்த்தி நாயனார் வரலாற்றில் பாடுகின்றார். தென்றல் உடல் வெப்பத்தைத் தணிக்கும். தென்தமிழ் உயிர் வெப்பத்தைத் தணிக்கும். அதனால் தமிழையும் தென்றலையும் ஒருசேர நினைந்து, “மொய்வைத்த வண்டின் செறி சூழல் முரன்ற சந்திரன் மைவைத்த சோலை மலயந்தரவந்த மந்த மெய்வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமிழும் தரும் செவ்வி மணம்செய்யீரம்.” என்று ஞாலம்…