சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்!
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ போராட்டம்! தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக…