தமிழ் வளர்கிறது! 19-21 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 16-18 : தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 19-21 : ஆங்கிலத்தில் கணக்கெழுதும் வேலை பார்ப்போன் அவரசத்தில் ஒருபிழையை எழுதி விட்டால் பாங்கினிலே பணிசெய்யத் தகுதி யில்லை படிப்பில்லை என்றவனை விலக்கி வைப்பார் ! ஓங்கிவளர் தமிழ்மொழியில் கலைப டைப்போர் உண்டுபண்ணும் பெரும்பிழைகள் ஒன்றி ரண்டா? ஈங்கிதனைக் கூறிடவோர் ஆளும் இல்லை எழுத்தாளர் பிழைத்தமிழும் கொழுத்துப் போச்சாம் ! (19) அரைப்படிப்புக் காரரெல்லாம தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் ! திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லா மிந்தத் திருநாட்டில் அறிஞர்களாய்…
தமிழ் வளர்கிறது! 16-18 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 13-15 : நாரா.நாச்சியப்பன் – தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 16-18 ஆங்கிலத்தைத் தமிழ்மொழியில் கலப்ப தாலே அறிவுயரும் மொழிவளரும் நாட்டிற் கென்றும் தீங்கிலேயே என மொழிவார்; தமிழில் எங்கும் செஞ்சொற்கள் இலையென்றும் கூறி நிற்பார். தேங்கியுள்ள சாக்கடையின் தண்ணி ராலே தேனாற்றில் பெருக்கெடுத்த தென்பார் போலே பாங்கிலுள்ள வடமொழியும் சொற்கள் தந்து பழந்தமிழை வளர்த்ததுவே சான்றா மென்பார் ! (16) கற்கண்டைக் கடியாமல் விழுங்கிப் பல்லைக் காப்பாற்ற வேண்டுமென்றும், அதனைப் போலே கற்கண்டைக் கல்க்கண்டென் றெழுதி னாற்றான் கடுந்தமிழைப் புரிந்துகொள்ள முடியு…
தமிழ் வளர்கிறது! 13-15 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 13-15 செந்தமிழில் மறுமலர்ச்சி சேர்ப்ப தற்கே சிறுகதைகள் புதுக்கவிதை வசனப் பாட்டு விந்தையுற எழுதுகிறோம் என்று சொல்லி விளையாடும் எழுத்தாளர் கூட்ட மொன்றாம் ! அந்தநாள் ஆபாசக் கதையை யெல்லாம் அச்சாக்கி மலிவான விலைக்கு விற்றுச் செந்தமிழைப் பரப்புவதாய்ப் பசப்பு கின்ற சிறுவணிகர் கூட்டந்தான் மற்றென் றாகும்! (13) இலக்கியத்தைத் தெருவெல்லாம் பரப்ப வென்றே எழுந்ததோர் இயக்கமெனில், தெருவின் பேச்சை இலக்கியமாய்த் தொகுத்தெழுதிப் பெருக்கு தற்கும் எதிரியென ஒரியக்கம் இருக்கக்…
தமிழ் வளர்கிறது! 10-12 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 10-12 தமிழ்நாட்டில் வானொலியை இயக்கு விக்கும் தனியுரிமை பெற்றவரோ வடமொ ழிப்பேர் அமைத்ததனை அழைக்கின்றர் இந்தி தன்னை அருமுயற்சி செய்திங்கே பரப்பு கின்றார். சமைத்துவைத்த அறுசுவைசேர் உணவி ருக்கச் சரக்குதனைக் குடிப்பாட்டும் சழக்கர் போலே நமைத்துன்பப் படுத்துகின்ற ஆள வந்தார் நாட்டுமொழி வளர்ச்சியினைத் தடுக்க லானார் ! (10) கொள்ளைகொலை ஆபாசச் செய்தி யென்னும் குப்பையெலாம் பரப்புகின்ற செய்தித் தாள்கள் கள்ளமிலா நாட்டினரின் உள்ளங் தன்னைக் கயமைவழிச் சேர்க்கின்ற கதையி தழ்கள்…
தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன் தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 7-9 : நாரா.நாச்சியப்பன் பொய்யான கருத்தெல்லாம் தமிழர் நாட்டில் புகுத்துகின்ற கதைகளையே வெறுத்தொ துக்கச் செய்யாரோ எனநினைத்தால் கலைந யத்தைச் செந்தமிழில் இறக்கிவைத்த கவிதை யென்று மெய்யாக விழாக்கள்பல நடத்தி வைத்து மேன்மேலும் அக்கதையே பெருக்கு வார்கள் செய்யாதே என்பதனைச் செய்வ தற்கே திரண்டோடி வருவாரிம் முரண்டர் கண்டீர் ! (7) தென்றமிழில், வடமொழியின் சொற்கள் வந்து திரிந்ததென ஆராய்ச்சி நடத்திக் காட்டி அன்றிருந்த தமிழ்ச்சொல்லும் வடசொல் லென்றே அழிவழக்குப்…
தமிழ் வளர்கிறது! 4-6 : நாரா.நாச்சியப்பன்
(தமிழ் வளர்கிறது 1-3 தொடர்ச்சி) தமிழ் வளர்கிறது! 4-6 எழுச்சியும் ஆர்வத் தீயும் என்னுளே எழுந்து பொர்ங்கக் கிளர்ச்சிசெய் வாரைக் கூடிக் கிடந்திடும் அந்தப் போதில் தளர்ச்சிநான் உற்றே னென்றால் தனிவியப் படைவீர், அந்த வளர்ச்சியின் நிலையைக் கண்டால் வடிந்திடும் கண்ணி ரன்றே ! தமிழினை வளர்ப்போ மென்றும் தமிழர்நா டடைவோ மென்றும் அமிழ்தென மொழிவோ ரெல்லாம் அவரவர் கொள்கை கொண்டு சுமைசுமை யாகத் தீமை தோற்றுவித் திடுதல் கண்டேன். அமைந்திடும் தமிழர் நாட்டுக் கவர்பணி வேண்டாம்! வேண்டாம் ! சொல்லழகு மனம்பறிக்கப் புலவன்…
தமிழ் வளர்கிறது! 1-3 : நாரா.நாச்சியப்பன்
தமிழ் வளர்கிறது! 1-3 விடுதலைத் தமிழ ரென்று வீறுடன் பேசு கின்ற முடிநிலை காண்ப தற்கு முழக்கடா சங்க மென்று திடுமென வீர ரெல்லாம் திரண்டுவந் தெழுப்பு மோசை கடிதினிற் கேட்டேன் இன்பக் களிப்பினில் துள்ளி வந்தேன். வடவரின் பிடியி னின்றும் வளர்தமிழ் நாட்டை மீட்கத் திடமுடன் தொண்ட ரெல்லாம் திரண்டனர் என்ற போது கடனெலாம் தீர்ந்தவன் போல் களிப்புடன் ஓடி வந்து படையினில் சேர்ந்து கொண்டேன்; பாடினேன் தமிழ்வாழ் கென்றே. தமிழரின் நாட்டை மீட்போம் தமிழ்நறு மொழியைக் காப்போம் தமிழரின்…