சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்
சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை 2023 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்க இருப்பது குறித்துத் தமிழ்வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் 1947 ஆம் ஆண்டில் தொடங்கியது. தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் மூலம் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. 1960 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் இத்திட்டத்தை தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், விதிமுறைகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. 1972 முதல் தமிழ் வளர்ச்சித்துறை…
பு தி ய ஆ ட் சி த் த மி ழ் ச் ச ட் ட ம் தே வை! – இலக்குவனார் திருவள்ளுவன்
(5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 6. பு தி ய ஆ ட் சி த் த மி ழ் ச் ச ட் ட ம் தே வை! தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பது கட்சி, சமய வேறுபாடின்றி அனைத்துத் தரப்பாராலும் பலமுறை வற்புறுத்தப்பட்டு வந்தது. தமிழறிஞர்கள், தமிழ்ப்பற்றாளர்கள், அரசியலாளர்கள் எனப் பலரும் கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றியும் தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினர். இவற்றின் பயனாக, ஆட்சிமொழிச்சட்டம் 1956இல்…
5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக!– தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 5. ஆட்சித்தமிழ்ச் செயலாக்கப் புது ஆணைத் தொகுப்பு வெளியிடுக! தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம் 1956 நிறைவேற்றப் பட்டதிலிருந்து இதுநாள் வரை தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்காகப் பல்வேறு அரசாணைகள், தொடர்பான சுற்றறிக்கைகள், மடல்கள், வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை இணையத்தளத்தில் 02.08.1968 முதல் 02.11.2021 வரையிலான 120 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில முன்னர் வெளியிடப்பட்டவற்றையே வலியுறுத்திப் பின்னரும் வெளியிடப்பட்டனவாக இருக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளமையே தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எந்த அளவில்…
4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 4. தமிழில் உள்ளனவே செல்லத்தக்கன என அறிவித்திடுக! அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது குறித்து ஆணைகள், சுற்றறிக்கைகள், அறிக்கைகள் எனப் பலவும் வேண்டிய மட்டும் வந்துள்ளன; வந்து கொண்டுள்ளன. இருப்பினும் முழுப்பயனில்லை. உண்மையிலேயே ஆட்சிமொழிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஒரே ஓர் ஆணை மட்டும் பிறப்பித்தால் போதும். அந்த ஆணை, தமிழில் உள்ள செயல்முறை ஆணைகள், அலுவலக ஆணைகள், நிதி ஆணைகள், பட்டியல்கள், படிவங்கள், ஒப்பந்தங்கள்,…
3. தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 3. உறங்குகின்ற தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினைத் தட்டி எழுப்புக! தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை (திருவள்ளுவர், திருக்குறள் 672) உரிய காலத்தில் செய்ய வேண்டியவற்றைக் காலந்தாழ்த்திச் செய்ய முற்படுவது, தனக்குரிய பணிகளைச் செய்யாமல் தட்டிக் கழிப்பது ஆகியவற்றிற்கு விருது தர வேண்டும் என்றால் தமிழ் வளர்ச்சித் துறைக்குத்தான் தர வேண்டும். எனவே, சிறப்பாகத் தமிழ்வளர்ச்சித்துறையைக் கொண்டு செல்ல வேண்டும் என்னும் முனைப்பிலுள்ள இத்துறையின்…
2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 இன் தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! தமிழ்வளர்ச்சித் துறை என்னும் பெயர் குறித்துப் பல்வேறு தமிழ் அமைப்பினரும் பிற துறையினரும் இத்துறை தமிழையா வளர்க்கிறது. அப்படியானால் தமிழ் வளரவில்லையா என்பர். சிலர் தமிழ் மேம்பாட்டுத் துறை எனப் பெயரிடலாமே என்பர். அப்படிக் கூறினால் தமிழ், மேம்படுத்தப்படவேண்டிய குறை நிலையில் உள்ளதாகப் பொருள் ஆகாதா என விடையிறுப்பேன். அலுவலகங்களில் தமிழை வளர்ப்பதால் தமிழ் வளர்ச்சித் துறை எனக்…