விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8 இன் தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 9. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை. வரும் 2023 ஆம் ஆண்டின் பொதுவிடுமுறை நாள்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் ஆங்கிலத்தில்தான் வெளியிட்டுள்ளது. நமக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. புத்தாண்டு நாள், பொங்கல், திருவள்ளுவர் நாள் முதலிய விவரங்களைத் தமிழில் தெரிவிக்க இயலவில்லையா? அல்லது கிழமைகளைத் தமிழில் குறிப்பிடத் தெரியவில்லையா? அல்லது தமிழில் கிழமைப்பெயர்கள் தெரியாதவர்கள்தான் செயலகத்தில் உள்ளனரா? அல்லது விடுமுறைப் பட்டியலில் தமிழில் கூற இயலாத அளவிற்கு அறிவியல் சொற்கள்…
தமிழ் முதலெழுத்து கட்டாயமா? -குமுதம் செய்தியாளர் செவ்விக்கட்டுரை
தமிழ் இன்சியல் கட்டாயமா? நடைமுறையில் சிக்கலோ சிக்கல் – கணேசுசுமார் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துகள்
தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்
தமிழின் இன்றைய நிலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனித்துவமான சொல்வளத்தையும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணத்தையும் பெற்று, இந்நாள் வரையில், அதன் இளமை மாறாது, வளர்ந்துவரும் தமிழ்மொழி, உலகின் உன்னத மொழிகளாய் அமைந்த ஒருசில மொழிகளுள் ஒன்று. வெறும் இலக்கியமொழியாக மட்டுமே அமைந்துவிடாது, இன்றுமட்டும், வாழும் மொழியாகிய அமைந்த தமிழ்மொழி, உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்பட்டு, அதன் மூலம், பல்வேறு வகையான பேச்சுவழக்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகு தமிழின் இன்றையநிலையை ஆறு கூறுகளாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம். வளர்ந்தோங்கும் இம்மொழியின் சிறப்புகளை மட்டுமே…
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால், பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே! அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…
தமிழ் ஒருங்குகுறியில் மீண்டும் ஏற்படுத்தப்படும் குழப்பம்! -முனைவர் மா.பூங்குன்றன்
உலகெங்கும் பேசப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு. ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா. மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது. அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன….
தமிழ் வளர்ச்சி – பாவேந்தர் பாரதிதாசன்
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும். இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும். வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும். இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும். எங்கள் தமிழ் உயர்வென்று…