தமிழ் வளர்த்த நகரங்கள் 5. – அ. க. நவநீத கிருட்டிணன் தமிழ் வளர்த்த சங்கங்கள் 2/2
(தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2 -தொடர்ச்சி) அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள் தொடர்ச்சி மதுரையில் கடைச்சங்கம் இச்செய்திகளால் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்திலும் பாரத காலத்திலும் சீரிய நிலையில் இருந்த செய்தி தெளிவாகின்றது. முதற் சங்கம் விளங்கிய தென்மதுரையும் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் கடல்கோளால் அழிந்தபின்னர், இந்நாளில் உள்ள மதுரை மாநகரில் கடைச்சங்கம் நிறுவப்பெற்ற செய்தி, பல புலவர்களால் கூறப்படுகின்றது. மதுரை மாநகரில் இயற்றமிழ்ச் சங்கமும் இசைத்தமிழ்ச் சங்கமும்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் : தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2
(தமிழ் வளர்த்த நகரங்கள் 3. – அ. க. நவநீத கிருட்டிணன் :. தமிழும் குமரகுருபரரும்-தொடர்ச்சி) அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள் தமிழ்வளர்த்த நாடும் நகரும் தொன்மையும் தூய்மையும் இனிமையும் வளமையும் ஆகிய கலங்களால் தன்னேரிலாது விளங்கும் தமிழைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்து வளர்த்த காவலர் பாண்டிய மன்னர்களாவர். தமிழகத்தையாண்ட முடிவேந்தர் மூவரும் தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் பேணிவந்தனராயினும் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாகும். அதனால் பாண்டிய நாட்டைத் ‘தமிழ்ப் பாண்டி நாடு’ என்றும், அந்நாட்டின் தலைநகராகிய மதுரையினைத்…