‘தமிழ்’ என்னும் சொல்லுக்குப் பொருள் – மயிலை சீனி. வேங்கடசாமி
‘தமிழ்’ என்னும் சொல்லுக்குப் பொருள் தமிழ் என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதா? தமிழ் என்றால், தமிழ் மொழி – தமிழ் பாசை – என்பது பொருள் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆம்; அஃது உண்மைதான். அன்றியும் தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்னும் பொருளும் உண்டு. இந்த இரண்டு பொருளைத் தவிர மூன்றாவதாக வேறு ஒரு பொருளும் தமிழ் என்னும் சொல்லுக்கு இருந்தது. அப்பொருள் பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்து விட்டது. அந்த மூன்றாவது பொருள் என்ன? அதுதான் அகப்பொருள் (காதல்) என்பது. அ ஃ தாவது, தமிழ் என்னுஞ்…