விடுதலைக் கருவை கழுத்தில் சுமந்தனர் !   துயிலும் இல்லம் உரைப்பது ஓன்று ஆணும் பெண்ணும் ஓர் நிறை என்று! ஆயிரம் தாய் சுமந்த உயிர்கள் அன்னை பூமியில் ஆழ(ள)ப் புதைந்தன!. பனிக்குடம் உடைத்து புவிமுகம் கண்டவர் தாயகம் காக்க நீர்க்குடம் விண்டனர் !. தாய்முகம் காண மாரைச் சப்பியோர் தாய்நிலம் பேண மரணத்தைச் சப்பினர்!. விடுதலை வெடியை மண்ணில் புதைத்தவர் வெடியின் திரியாய் தம்முயிர் தந்தனர் ! ஆயிரமாண்டு விலங்கினை உடைத்திட ஆலகால விடத்தினைக் கடித்தனர் ! சிங்கள இனவெறி கொடுமையை விரட்டிட…