தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார் -கெர்சோம் செல்லையா.

தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார்!   எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல், எவ்வளவென்று மலைக்கின்றார். இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி, எளியரும் பண்பைக் கலைக்கின்றார். தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி, தரணியைச் சீர் குலைக்கின்றார். அப்படிப்பட்டோர் கையினில் மீள, அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்! கெர்சோம் செல்லையா

தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர் கருணாநிதியும் இளைய தலைவர் தாலினும்   பொருளாளர் என்ற பொறுப்பில் இருந்து தலைவர்போல் செயல்பட்டு வருகிறார் தாலின்.  இருப்பினும் அவர் தலைவராகவே ஆக வேண்டும் என்று அவரது அன்பர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்களும் மூத்த தலைவர்களும் கலைஞர் கருணாநிதி இருக்கும் வரையில் தலைவர் அவர்தான் என்று வலியுறுத்தி வருகின்றனர்.   இதற்கான காரணம், இளைஞர் அணி என்பதை, மகளிர் அணி, வழக்குரைஞர் அணி முதலான பிற 17 அணிகள்போல் கருதாமல் தனிக்கட்சிபோல் நடத்தியமைதான். அரசர்வீட்டுக் கன்றுக்குட்டியாகத் தாலின்…

தக்கவர் சசிகலாவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

தக்கவர் சசிகலாவே! ?  அஇஅதிமுகவின்  பொதுச் செயலாளராக  யார் வரவேண்டும் என்பது அக்கட்சி சார்ந்தது. இதுகுறித்துப் பிறர் கருத்து தெரிவிக்கலாமா?   ஆமாம். ஒரு கட்சியின் உட்கட்சி வேலைகுறித்துப் பிறர் கவலைப்படத் தேவையில்லைதான். ஆனால், அஇஅதிமுக ஆளுங்கட்சி. ஆளுங்கட்சியின் முடிவு அரசையும் கட்டுப்படுத்தும். எனவே, அக்கட்சி உறுப்பினர்கள்  அல்லாதவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது பலரும் வேண்டுமென்றே திரித்துப் பொய்யைப் பரப்புவதால் நாமும் நம் கருத்துகளைத்தெரிவிக்கலாம். ? ஆனால், அக்கட்சியில் ஒரு பகுதியினரும் அக்கட்சி சாராதவர்களில் பெரும்பகுதியினரும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடாது என்றுதானே…

பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை ஒதுக்குதல் வேண்டும்-சி.இலக்குவனார்

பொதுத் தொண்டு புரிவோர், சிறியோர் கூட்டத்தினை  ஒதுக்குதல் வேண்டும்   சிற்றினம்-சிறிய இனம். ஒழுக்கத்தாலும் அறிவாலும் குறைந்திருப்போரை இனமாகக் கொள்ளுதல் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ளோர்க்கு நன்மை பயவாது. பதவியுயரச் செல்வமும் செல்வாக்கும் உயரும். செல்வம் உயர உயர வீணரும், வெற்றுரைகாரரும், சூதாடுவோரும் வலியவந்து சேர்வர். அவர்களை அகற்றாது நட்பாகக் கொள்ளின் ஆளும் தலைவர் அல்லற்பட்டு அழிய வேண்டியதுதான். பொறுப்புகளும் கடமைகளும் மிகமிக, ஒவ்வொன்றையும் நேரில் ஆய்ந்து நிறைவேற்றுதல் இயலாது. சுற்றியிருப்போர் சொல்லும் கூற்றை நம்புதல் வேண்டியவரும். அவர் சொல்லும் கூற்று உண்மை வயப்பட்டதாயின், யார்க்கும்…

தலைவர்-துணைத்தலைவர் மோதல்களால் ஊராட்சிப் பணிகள் பாதிப்பு

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள ஊராட்சிகளில் தலைவர் துணைத்தலைவர் இடையே உள்ள மோதல்களால் ஊராட்சிப் பணிகள் பாதிப்படைந்து வருகின்றன.  தேவதானப்பட்டி அருகில் உள்ள எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, கெ.கல்லுப்பட்டி, செயமங்கலம், மேல்மங்கலம், முதலக்கம்பட்டி, குள்ளப்புரம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலைவர்களுக்கும் துணைத்தலைவர்களுக்கும் உச்சகட்டப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரும்பாலான பணிகளுக்குக் காசோலையில் கையெழுத்திட தலைவர் வந்தால் துணைத்தலைவர் வருவது இல்லை; துணைத்தலைவர் வந்தால் தலைவர் வருவது கிடையாது. இந்நிலையில் சில ஊராட்சிகள் எதிர்வரும் உள்ளாட்சித்தேர்தலில் பெண்கள் தொகுதியாகவும், சில ஊராட்சிகள் தனி ஊராட்சியாகவும் மாற்றப்படஉள்ளன. இதனால்…