திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்
(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம் தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல். உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை, அற்றே, தவத்திற்(கு) உரு. துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை தூய தவத்தின் இலக்கணம். . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை அஃ(து)இலார், மேற்கொள் வது. மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு; பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு. துறந்தார்க்குத்…