கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்கு ‘கவிதை உறவு’ வழங்கும் சிறந்த நூலுக்கான முதல் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர். 2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை…