அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29 ஆம் நாள் தொடங்கி பிப்பிரவாி 7 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…