(பூங்கொடி 23 : காமங் கடந்தவள் – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் கலக்கம்      கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின னாகிப் படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ! சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப்      புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ! புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும் உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி அரவம் சிறிதும் அறியா இடமாம்; அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல    5      நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்; கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்; உள்ளிற் செல்லுதல்…