வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 3.தாய்தந்தையரைத் தொழுதல்
மெய்யறம் (மாணவரியல்) [வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.] 3.தாய்தந்தையரைத் தொழுதல் தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம். நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர். அவரிற் பெரியர் யாருமிங் கிலரே. அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை. 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக. நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும். அவர்பணி யெல்லா மன்பொடு செய்க. அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும். அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க. அவர்களின் அறிவுரைகளை அறிந்து…