செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்

செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம்     முதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.   முதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை.   கூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா…

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை!   தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில்  கலைஞர் கருணாநிதியால்  கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக்  கூற முடியாதே! சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும்? “தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. கட்சிப் பதவிக்கு யார் வர வேண்டும் என்பதைப் பொதுக் குழு, செயற்குழுதான் முடிவு செய்யும்’  என்பதல்லவா கலைஞர் கருணாநிதியின்  அழுத்தமான பேச்சு. எனினும் தி.மு.க. பொருளாளராக…

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!   மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால்,  பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது  தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே!   அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…

தி.மு.க.வின்மீதான கசப்பு குறையவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை!   மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார்.  கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் வல்லமையும் அவருக்கு மிகுதியாகவே உண்டு. உலக அளவில் மிகுதியான படைப்புகளை வழங்கியுள்ள முதல் அரசியல் தலைவரும் அவர்தான். என்றாலும் மக்கள்திலகம் ம.கோ.இரா எனப்படும் எம்ஞ்சியார் உருவாக்கிய…

துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் – தாலின் குற்றச்சாட்டு!

ஒட்டிகள் ஒட்டுவதில் காட்டும் அக்கறையைப் பொருள்கள் வழங்குவதில் காட்ட வேண்டும்!   கும்மிடிப்பூண்டியில் ஏறத்தாழ உரூ. 10 இலட்சம் மதிப்புள்ள துயரீட்டு உதவிகளை வழங்க வந்த தி.மு.க பொருளாளர் மு.க..தாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயரீடுகள் வழங்குவதில் அ.தி.மு.க அரசு மெத்தனம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.   திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தி.மு.க சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டத்திலுள்ள 61 ஊராட்சிகளைச் சேர்ந்த 81ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000பேர்களுக்கு மழை வெள்ளத்துயரீடுகள் வழங்கப்படும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.   கும்மிடிப்பூண்டி…

செய்திக் குறிப்புகள் சில

  அமெரிக்காவின் இலாங்வுட்டு பல்கலையில் நடந்த அறிவியல் உச்சி மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் டெனித் ஆதித்யாவின்  வாழையிலையைப் பதப்படுத்திக் குவளை, கிண்ணம் உருவாக்கிச் சுற்றுச் சூழலை மாசின்றி அமைக்கும் கண்டுபிடிப்பு குறித்துக் கலந்துரையாடல் நடந்தது.   பிரிட்டனைச் சேர்ந்த ஃபெயித்து என்ற 9  அகவைச் சிறுமி புத்தகங்கள் படிப்பதில் உள்ள   கழிமிகு விருப்பத்தின் காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப் படித்து முடித்துள்ளார். மது ஒழிப்புக்கு ஆதரவாகப் போராட மாணவர்கள் முன்வர வேண்டும் –  தமிழருவி மணியன் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களின் செலவு …