நீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு
நீறு பூத்த நெருப்பு 1 ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. ‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன்…