மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6 மணி முதல் – 8 மணி வரை இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் தலைமை: கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க) முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்), மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்), கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்) வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை…

கேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு

பூட்டுத்தொழிலுக்குப் பூட்டு!  பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால் அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால்…

காட்டைப் பார்த்து வெகு நாளாயிற்று … குமுறும் ஆடுகள் 2

2   மேற்குமலைத்தொடர்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உழவிற்கு அடுத்தபடியாக விளங்குவது கால்நடை வளர்ப்புத்தொழில்தான். இந்த இரு மாவட்டங்களும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ளமையால் கால்நடை வளர்ப்பதைப் பரம்பரைத் தொழிலாக வைத்துள்ளனர். தற்பொழுது கோடை மழை பெய்து நின்றுவிட்டதாலும் அணைகள், அருவிகள் அனைத்தும் நிரம்பி விட்டதாலும் இப்பகுதிகளில் உள்ள வேளாண் பூமிகளில் நெல், கரும்பு, தக்காளி, வாழை முதலான பயிர்த்தொழிலும், மானாவாரிப் பகுதிகளில் விதைகள் விதைப்புப் பணி தொடங்குகிறது. எனவே ஆடு, மாடுகளை மேய்க்கக் காட்டுப்பகுதிகளைத்தான் நாடிச்செல்லவேண்டியுள்ளது. இவற்றைத்தவிர வனப்பகுதி,…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்க மாவட்ட மாநாடு, திண்டுக்கல்

  திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் இலெட்சுமி விலாசு வங்கி மேல்மாடியில் எதிர்வரும் கார்த்திகை 4, 2045- 20.11.2014 அன்று மாலை 5 மணியளவில் மாநாடு நடைபெற உள்ளது. இதன்தொடர்பாகச் செய்தியாளர்களிடம் கூறிய தமுஎகச அமைப்பைச்சேர்ந்த கவிவாணன் கூறுகையில், விடுதலைப்போராட்டத்தில் நம்நாட்டு விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்துக்கொண்ட சுப்பிரமணிய சிவா, தமிழகத்தில் இரண்டாவது முழு நீளப் புதினமான கமலாம்பாள் சரித்திரம் எழுதிய நாவலாசிரியர் இராசம்(அய்யர்), மணிக்கொடி இதழின் ஆசியரான ‘மணிக்கொடி சிறுகதைகள்’ என்ற நூலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும் திரைப்பட உரையாடலாசிரியருமான பி.எசு.இராமையா, ‘எழுத்து’…

தூய்மைக்கேடாக்கப்படும் மஞ்சளாறு அணை

  தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நாளுக்கு நாள் தூய்மைக்கேடாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொற்று நோய் பரவும் பேரிடர் உள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் உழுதொழில், குடிநீர்த் தேவைகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் பயிர் நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன. இதே போல மஞ்சளாறு அணையில் உள்ள நீரை நம்பி ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை பயனடைந்து வருகின்றன.   இப்பொழுது மஞ்சளாறு அணை ஆடு, மாடு போன்ற கால்நடைகள்…