பாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 4/4 1960க்குப் பிறகு பாவேந்தர் நேரடி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறார். இந்தக் காலக்கட்டங்களில் பழைய சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்களைக் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்ற பெயரிலும் ‘மணிமேகலை வெண்பா’ என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்கின்றார். அரசியலில் இருந்து ஒதுங்கும் முயற்சியே இவ்வகை மறு ஆக்கங்கள். திரைப்படம் எடுக்கும் முயற்சியில் முழுதாக ஈடுபட்டுத் தோல்வியடைகின்றார். அரசியலை முற்ற முழுதாக வெறுக்கத் தொடங்குகின்றார். இந்நாள் இருக்கும் கட்சிகள் தாமும் கட்சித் தலைவர் என்று…