அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) – பாத்திமா மைந்தன்
அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) மணமுறிவு / மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்கு’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்கு’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவாகரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும். இசுலாத்தின் பார்வையில் இல்லறம் ஒரு நல்லறமாகவும், ஓர் ஒப்பந்தமாகவும் உள்ளது. இல்லற வாழ்வு நீடித்து நிலை பெற வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்வதை இசுலாம் ஊக்குவிக்கிறது. வாணாள்…