திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடுக்கண் அழியாமை
(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை துன்புறினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும்திறன். இடுக்கண் வரும்கால், நகுக; அதனை, அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல். எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி. வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார், உள்ளத்தின் உள்ளக், கெடும். வெள்ளம் போன்ற பெரும்துயரும், சிந்தனை உறுதியால் சிதையும். இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு) …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்வினை உடைமை
(அதிகாரம் 061. மடி இன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 062. ஆள்வினை உடைமை ஏற்றுக் கொண்ட செயல்முடிக்க, இடைவிடாது செய்யும், நல்முயற்சி “அருமை உடைத்(து)”என்(று), அசாவாமை வேண்டும்; பெருமை, முயற்சி தரும். “முடியாதது” என்று, மலைக்காதே; முயற்சி, பெருமையாய் முடியும். வினைக்கண், வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை தீர்ந்தாரின், தீர்ந்தன்(று) உலகு அரைகுறையாய்ச் செயல்கள் செய்யாதே; செய்தால், உலகமும் கைவிடும். தாள்ஆண்மை என்னும், தகைமைக்கண் தங்கிற்றே, வேள்ஆண்மை என்னும், செருக்கு….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 061. மடி இன்மை
(அதிகாரம் 060. ஊக்கம் உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 061. மடி இன்மை குடும்பத்தையும், குடியையும் உயர்த்த முயல்வார் விடவேண்டிய சோம்பல் குடிஎன்னும் குன்றா விளக்கம், மடிஎன்னும் மா(சு)ஊர, மாய்ந்து கெடும். சோம்பல்தூசு படிந்தால், அணையாக் குடும்ப விளக்கும் அணையும். மடியை, மடியா ஒழுகல், குடியைக், குடியாக வேண்டு பவர். குடியை, உயர்ந்த குடியாக்க விரும்புவார், சோம்பலை விலக்குக. மடிமடிக் கொண்(டு)ஒழுகும், பேதை பிறந்த குடி,மடியும்…